Breaking News
recent

மண் வாசனை...


சமீபத்தில் ஒரு நாள் எனது நண்பர் வீட்டிற்கு அவரை சந்திக்கச் சென்றிருந்தேன். அன்போடு வரவேற்ற அவர் தனது வீட்டின் மாடித்தோட்டத்தில் பயிரிடப்பட்ட பச்சைக்காய்கறிகளால் செய்த சுவையான சலாட் மற்றும் சிறிய மண் குவளையில் இளந்தயிரும் தந்து உபசரித்தார். மணமும் சுவையும் என் நாவை மட்டுமல்ல உள்ளத்தையும் குளிர்வித்தது. காலாகலமாக மனிதன் மண்ணோடு ஒன்றிவாழ்ந்த காலம் போய் மண் வாசனையே இல்லாத நவீன கண்டுபிடிப்பான இரசாயணக் கலவையால் உருவாக்கப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்கத் துவங்கிவிட்டான். நாளடைவில் அதன் ஆதிக்கம் பல்வேறு வடிவங்களாகவும், உருவங்களாகவும் உருமாறி நம்மோடு ஒன்றிப்போயிற்று. உண்ணும் பாத்திரங்கள் முதல் உட்காரும் நாற்காலி வரை அதன் சாம்ராஜ்ஜியம் விரிவடைந்து நம்மை அடிமை படுத்தி விட்டது என்றே சொல்லலாம்.

vkalathurone.blogspot.com

vkalathurone.blogspot.com
கால் நூற்றண்டுகளுக்கு முன்பு வரை மண்பாண்டங்கள் புழக்கத்தில் இருந்து வந்ததை நம்மால் மறுக்க இயலாது. சிறுபிள்ளைகளுக்கு சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வீட்டில் வாங்கித்தரும் மண் உண்டியல், மண்சட்டிகளில் மணக்க மணக்க தாளித்து தளதளக்கும் மீன் குழம்பு, புளியாண சட்டிகள், ஆப்பச்சட்டிகள், கோடை வெப்பத்தை தணிக்க குடம் மற்றும் பானைகள், விருந்து வைபவங்களில் தண்ணீர் அருந்த வைத்திருக்கும் மண்கலயங்கள், கறி, கத்திரிக்காய் என கமகமக்கும் மண் சிட்டிகள், நோன்பு காலங்களில் கஞ்சி குடிப்பதற்காக பரத்தப்பட்டிருக்கும் மண் சிட்டிகள், இவைகள் யாவும் பக்க விளைவுகளோ பாசாணங்களோ இல்லாத பாரம்பரியமான மண் பாண்டங்கள். நம் மண்ணில் உருவாகும் இயற்கையின் இதமான அன்பளிப்பே அன்றி வேறேது?

vkalathurone.blogspot.com

vkalathurone.blogspot.com

பல வகை வேதிப்பொருட்களாலும் உலோகக் கலைகளாலும் உருவாக்கப்படும் பாத்திரங்கள் வித விதமான வடிவங்களில் அன்றாடம் நம் வாழ்வில் உணவுப் பொருட்களை வேக வைத்து உண்ணுவதற்கும், குளிர்வித்து பருகுவதற்கும் பயன்படுத்தி வருகின்றோம். இதனால் ஏற்படும் இரசாயண மற்றங்களால் வேண்டாத வேதியல் மாற்றங்கள் ஏற்படுவதுடன் நம் ஆரோக்கியமும் கேள்விக்குறியாகி நோய்வாய் பட்டு மருத்துவரை அணுகும் நிலை. அவசர காலத்தில் உழலும் மனிதன் தன் அவசியத்தை உடனே நிறைவேற்ற ஆவி பறக்கும் குக்கர்களைக் கையாண்டு அனைத்து ஊட்டச்சத்துக்களையும் உஸ்... எனும் ஓசை மூலம் வெளியாக்கி வெறும் சக்கையை மட்டுமே உண்பது விநோதமாகவே உள்ளது. உழவர் திருநாளில் சமைக்கும் பொங்கல் பானைகள் ஒரு போதும் உலோகத்தால் ஆனவை கிடையாது. மண்ணுடன் வாழ்ந்து வரும் ஒவ்வொரு விவசாயிகளும் பழைய சோற்றை மண் கலயங்களில் வைத்துதான் உண்டு வருகின்றனர். மண்பாண்டங்களில் சமைக்கும் உணவு வெகு சீக்கிரத்தில் கெட்டுப்போவதில்லை. மேலும் சமைக்கும் பதார்த்தங்கள் சுவை, மணம், ஆரோக்கியம் நிறைந்ததாகவே இருக்கும். இதில் சமைக்கும் உணவுகள் யாவும் நம் செரிமானத்திற்கு ஏற்றதகவும் எளிதில் வெந்துவிடக்கூடியதாகவும் இருக்கும். மீன் குழம்பு அல்லது புளியாணம் அலுமினிய சட்டிகளில் இருந்தாலே மறு நாளே பாத்திரங்களில் கரும்புள்ளிகள் விழுந்து அரித்து ஓட்டையாகி விடும்.

vkalathurone.blogspot.com

vkalathurone.blogspot.com

களி மண்ணால் செய்யப்படும் இந்த மண்பாண்டப் பொருட்கள் வெயிலில் காய வைக்கப்பட்டு சுள்ளைகளில் வைத்து சிகப்பு நிறம் வரும் வரை சுடவைத்து பின்னரே சந்தைக்கு விற்பனைக்கு மண்பாண்டப் பொருட்களாக வருகிறது. இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அகழ்வாராய்ச்சியில் பூமிக்கடியிலிருந்து கிடைக்கும் பண்டைய காலப் பழக்கத்தில் இருந்து வந்த மண்பாண்ட பொருட்களும், பரண்கள், பானைகள் முதுமக்கள் தாழியும், மண்ணால் ஆன ஆயுதங்களும் கண்டெடுக்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட பல்வேறு மண் சார்ந்த பொருட்கள் அனைத்தையும் நமது அரசு பத்திரமாக பாதுகாத்தும் வருகின்றது. முன்னோர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த விதமும், பயன்படுத்திய பொருட்களும், உட் கொண்ட உணவுகளும் தான் அவர்கள் வயதை நூற்றண்டுகளுக்கு மேல் உயர்த்தியது என்பது மறுக்க இயலாத உண்மை. வேகமாக சுழழும் இவ்வுலகில் நாம் நமது நேரத்தை மிச்சம் பிடிப்பற்காக அரைவேற்காடான அதுவும் முற்கூட்டியே வேகவைத்து பாக்கெட்டுகளில் பதப்படுத்தப்பட்ட பல்வேறு துரித உணவுகளை ஃபாஸ் ஃபுட் எனும் பெயரில் பயன்படுத்தி வருகின்றோம். இது ஒரு புறமிருக்க மறு புறத்தில் சில நகர, கிராம பகுதிகளில் மண்பானை சமையல் என்று போர்டு போட்ட உணவகங்கள் செயல்பட்டும் வருகின்றன. மேலும் கேரள மாநில மக்கள் மண்பாண்ட சமையலையே விரும்பி சாப்பிடுகின்றாகள். இதனால்தான் இன்றளவும் அவர்களது ஆரோக்கியமும் ஆயுளும் பிற மாநிலத்தவர்களை விட உயர்வாகவும் உறுதியாகவும் இருந்து வருகின்றது. புகையிறின்றி, கரிக்கறையின்றி துரிதமாக சமைக்க நாம் பயன்படுத்தி வரும் உலோகத்தினாலான பாண்டங்கள் மற்றும் மண்ணோடு மக்காத மாபெரும் அசுரனான ப்ளாஸ்டிக் பொருட்கள் இவைகளின் வரவால் ஆயுள் குறைந்து அவதிப்படுவது மனித குலம் மட்டுமின்றி பறவைகள், கால்நடைகள் அக்கழிவுகளை உட்கொண்டு செத்து மடியும் காட்சியை நாள் தோறும் நாம் பார்த்து வருகின்றோம். காலத்தின் மாற்றத்திற்கேற்ப மண்பண்டங்கள் மெல்ல சாகும் நிலை அதிகரித்து வருவது கவலைக்குரியதே!

vkalathurone.blogspot.com

vkalathurone.blogspot.com
கோடை காலங்களில் மட்டும் தான் குளிர்ந்த நீருக்கவும் மோருக்கவும் பானைகள் வாங்குகின்றோம். இன்னும் மீன் சட்டி ஆப்பச் சட்டிகள் விரல் விட்டு எண்னக்கூடிய வீடுகளில் மட்டுமே காண முடிகின்றது. பூந்தொட்டிகள் கூட தற்போது மண்ணின் நிறத்தாலான ப்ளாஸ்டிக்கில் விற்பனை செய்து வருகின்றனர். மண்ணோடு ஒன்றி வாழ்ந்த நம் முன்னோர்கள் தம் இல்லங்களில் அன்றாடம் பயன்படுத்தி வந்த மண்பானைகளின் பெயர்பட்டியலைக் கேட்டால் நமக்கு வியப்பாகவும் வினோதமாகவும் இருக்கும், இதோ அவர்கள் கையாண்டு வந்த மண்பானைகளின் பெயர்கள் சில... அஃகப் பானை, அஃகுப் பானை, அகட்டுப் பானை, அடிசிற் பானை, அடுக்குப் பானை, அரசாணிப்பானை, உசும்பிய பானை, உறிப் பானை, எஃகுப் பானை, எழுத்துப் பானை, எழுப்புப் பானை, ஒறுவாயப் பானை, ஓதப் பானை, ஓர்மப் பானை, ஓரிப் பானை, ஓவியப் பானை, கஞ்சிப் பானை, கட்டப் பானை, கட்டுப் பானை, கதிர்ப் பானை, கரகப் பானை, கரிப்பானை, கருப்புப் பானை, கலசப் பானை, கழுநீர்ப் பானை, காடிப் பானை, காதுப் பானை, குண்டுப் பானை, குறைப் பானை, கூடைப் பானை, கூர்முனை பானை, கூர்ப் பானை, கூழ்ப் பானை, கோளப் பானை, சருவப் பானை, சவப்பானை, சவலைப் பானை, சன்னப் பானை, சாம்பல் பானை, சொண்டுப் பானை, சோற்றுப் பானை, சில்லுப் பானை, சின்ன பானை, தவலைப் பானை, திடமப் பானை, திம்மப் பானை, துந்திப் பானை, தொண்ணைப் பானை, தோரணப் பானை, தோள் பானை, நாற்கால் பானை, பச்சைப் பானை, படரப்பானை, பிணப் பானை, பொள்ளற் பானை, பொங்கல் பானை, மங்கலக் கூலப் பானை, மடைக்கலப் பானை, மிண்டப் பானை, மிறைப் பானை, முகந்தெழு பானை, முடலைப் பானை, முரகுப் பானை, மொங்கம் பானை, மொட்டைப் பானை, வடிநீர்ப் பானை, வழைப் பானை, வெள்ளாவிப் பானை, இவ்வாறு பல வடிவங்களில் மண் பானைகளையும் பாண்டபத்திரங்களையும் தன் பயன்பாட்டுக்கு உபயோகித்து வந்த காலம் மண்ணோடு மண்ணாகி மறைந்து போயிற்று எனலாம்.

vkalathurone.blogspot.com

vkalathurone.blogspot.com

பானையில் சோறு பொங்கி வாழையிலையில் பரிமாறி மண்சட்டியில் மீன் குழம்பும், கலையத்தில் தெளிமோரும், பந்தியில் அமர்ந்து சாப்பிடும் பாரம்பரிய வழக்கம் நம் தமிழர்களின் பழக்கம்! இனியேனும் இயன்ற வரை மண்பாண்டங்களைப் பயன்படுத்தி நம் வாழ்வாதாரங்களை வளப்படுத்தி உடல் நலத்தைப் பேணுவதோடு மண்ணின் பெருமையக் காப்பாற்றும் மண்ணின் மைந்தர்களாய் நாம் வாழ்வோமாக!

vkalathurone.blogspot.com

vkalathurone.blogspot.com
என்என்றும் மண்வாசனை மறவாத துபாய்லிருந்து ச.முஹம்மதுரபிக்


VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.