Breaking News
recent

அபுதாபியில் பெய்த மழையால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.!(PHOTOS)


அமீரகத்தின் பல பகுதிகளில் நேற்றும் இன்றும் பலத்த மழை பெய்தது. அபுதாபி அதன் சுற்றபுற பகுதிகளில் இன்று காலை 10 மணிக்கு மேல் வானம் இரண்டும் இடியுடன் கூடிய மழையும் பெய்தது.  மழையோடு சேர்ந்து பலத்த காற்றும் சூராவலிபோல் சுழன்று அடித்தது.  இதனால் மரூர், ஏர்போட் மற்றும் முஸஃப்பா சாலைகளில் உள்ள மரங்கள் கிளைகள் உடைந்தும், பல இடங்களில் வேறோடு சாய்ந்தது.

அபுதாபியில் கடந்த இருபது வருடங்களில் இந்த மாதிரி மழையை பார்த்ததில்லை என்ற தகவலும் தருகின்றனர் அங்கு வேலை செய்யும் தமிழ் மக்கள். மேலும் எலக்ட்ரா சாலையில் உள்ள அடுக்குமாடி கட்டிடங்களின் ஜன்னல்களில் பொறுத்திருக்கும் கண்ணாடிடி கிளாஸ்கள் உடைந்து நொருங்கின.  வங்கி வர்த்தகமும் இண்டர்நெட் கணக்‌ஷன் தொடர்பு விடுபட்டதால் சிறிது நேரம் வர்த்தகம் பாதிப்படைந்து.  அங்கங்கே ரோடுகளில் மழைநீர்  தேங்கி நிற்கின்றது.
பலத்த காற்றினால் சாலைகளின் இருபுறங்களில் உள்ள மரங்கள் சாய்ந்து சாலைகளில் விழுந்ததால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.  பேரித்த பழம் மரம் வேறோடு சாய்ந்தது.  கன்ஸ்டரக்‌ஷன் கம்பெனிகளில் வேலை பார்க்கும் தொழிளாலர்கள் பாதியிலேயே வேலை நிறுத்தி வீடு திரும்பினர்.  மேலும் மழை தொடர்ந்து மூன்று நாட்கள் நீடிக்கும் என்றும் வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது.  இன்றும் நாளையும் பள்ளிகலுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.




VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.