2022-ம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளுக்கான உட்கட்டுமான வசதிகளை அமைப்பதற்காக வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள
வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நிலைமைகளை ஆராய்வதற்காக பிபிசி செய்தியாளர்கள் அங்கு சென்றிருந்தனர்.
கத்தார் பிரதமர் அலுவலகம் விடுத்திருந்த அழைப்பின் பேரிலேயே 4 பேர் கொண்ட பிபிசி செய்தியாளர்கள் குழு அங்கு சென்றிருந்தன.
ஆனால், செய்திகளை சேகரித்துக் கொண்டிருந்தபோது கத்தார் பாதுகாப்புப் படையினரால் தாங்கள் தடுக்கப்பட்டதாக
பிபிசியின் மத்திய கிழக்கு விவகார செய்தியாளர் மார்க் லொபெல் தெரிவித்தார்.
தாங்கள் உளவுத்துறையினர் போல நடத்தப்பட்டதாகவும் தங்களின் ஊடக கருவிகள் அனைத்தையும் அதிகாரிகள் எடுத்துச் சென்று விட்டதாகவும் அவர் கூறினார்.
செய்தியாளர்கள் அனைவரும் தனித்தனியாக விசாரிக்கப்பட்டு இரண்டு இரவுகள் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் மார்க் லொபெல் கூறினார்.
பிபிசியின் செய்தியாளர்கள் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் என்ன நடந்துள்ளது என்று ஆராய்ந்துவருவதாக ஃபிஃபா தெரிவித்துள்ளது.
உலகக் கோப்பை போட்டிக்கான அரங்க நிர்மாண வேலைகளில் அமர்த்தப்பட்டுள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நடத்தப்படுகின்ற விதம் தொடர்பில் கத்தார் மீது கடுமையான விமர்சனங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக