அனுபவத்தை வாழ்க்கை முழுதும் மறக்க மாட்டார்கள். மறுபடியும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் என்றால் நிச்சயம் தயங்குவார்கள்.
ஏன் என்றால் அந்த பயணத்தில் அவர்கள் கிட்டதட்ட செத்து பிழைத்தார்கள். பயணிகளை அந்த நிலைக்கு உள்ளாக்கியது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம்.
அன்று வழக்கமான புறப்பாடு நேரமான 00.55 க்கு பதில் தாமதமாகவே புறப்பட்டது.
புறப்படுவதற்கு முன்னரே விமானத்தில் ஏதோ தொழில் நுட்ப கோளாறு இருப்பதை விமானி அனுமானிக்கிறார்.
அதனால் 50க்கும் மேற்பட்ட பயணிகளின் லக்கேஜ் மற்றும் சுமார் ஒண்றரை டன் ஏற்றுமதி கார்கோ வையும் இறக்கிவிட்டு விமானம் புறப்படுகிறது.
புறப்படும்போதே வித்தியாசமான சப்தங்கள் வந்ததாக பயணிகள் சொல்கின்றனர்.
விமானம் கதவடைத்து புறப்பட்டவுடன் விமானத்தில் கோளாறு, கொச்சி செல்வதாக விமானி கூறியுள்ளார்.
இதிலிருந்து ஒரு விசயம் தெளிவாகிறது, விமானத்தில் கோளாறு இருப்பது தெரிந்தே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் விமானத்தை இயக்கியுள்ளது.
இல்லை எனில் எதற்காக பயணிகளின் லக்கேஜ் மற்றும் ஏற்றுமதி கார்கோவை ஆப் லோடு செய்ய வேண்டும்?
அதேபோல் விமானம் புறப்படுவதற்கு முன்னர் விமானத்தில் கோளாறு என்றால் பயணிகள் பிரச்சினை செய்வர், மாற்று விமானம் கேட்பர் என்று தந்திரமாக பயணிகளை விமானத்தில் ஏற்றிய பின்னர் தெரிவித்துள்ளது.
என்ன ஒரு பயணிகள் நலம்,
அக்கறை?
அப்பாவி பயணிகளுக்கு என்ன தெரியும்? முதலில் கொச்சி என்ற விமானி பின்னர் அங்கு பருவநிலை சரியில்லை அதனால் சென்னைக்கு விமானம் திருப்ப்படுகிறது என்று கூறி அடுத்த பீதியை கிளப்பி விட்டுள்ளார்.
பொதுவாக அதிகாலையில் கொச்சி விமான நிலையத்தில், தினசரி எமிரேட்ஸ், எதிகாத், ஏர் அராபியா, கல்ப் ஏர், குவைத் ஏர்வேஸ், கத்தர் ஏர்வேஸ் போன்ற வளைகுடா விமான சேவைகளும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஜெட் ஏர்வேஸ் உள்ளிட்ட குறைந்தது 10 விமான சேவைகள் சராசரியாக உள்ளன.
இந்த விமானசேவைகளுக்கு எல்லாம் அன்றைய பருவநிலை ஒத்துழைத்தது, திருச்சி விமனத்திற்கு மட்டும் ஒத்துழைக்கவில்லை.
என்ன கதையோ? இத்தனைக்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தினசரி கொச்சியில் சுமார் 10 சேவைகளை வழங்கி வருகிறது. அந்நிறுவனத்தின் தலைமையகமே கொச்சிதான்.
திருச்சி விமானம் கொச்சியில் இறங்கினால் பயணிகளுக்கு வசதிகள், மாற்று ஏற்பாடோ, மாற்று விமானமோ தேவை எனில் கொச்சியின் வழக்கமான சேவைகள் பாதிக்கப்படலாம் என கருதியதோ என்னவோ?
ஒரு வழியாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (IX 611) 5 மணி வாக்கில் சென்னையில் தரையிறங்கிய பின்னரே பயணிகளுக்கு உயிர் வந்தது.
அங்கும் பயணிகளை விமானத்தில் இருந்து இறக்கலாமா வேண்டாமா என்று ஜோசியம் பார்த்து, பூ போட்டு பார்த்து, பயணிகள் சத்தம் போட்ட பின்னரே விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டுள்ளனர்.
இவ்வளவு களோபரத்திற்கு, ஒழுங்காக இங்கே திருச்சியிலேயே பயணிகளிடம் சொல்லி இருந்தால் குறைந்தது திருச்சிக்காரர்களாவது அவர்கள வீட்டிற்கு சென்று நிம்மதியாக தங்கி இருந்திருப்பார்கள்.
உயிர் பயம் மிச்சமாகி இருக்கும். ஆனால் பொறுப்பின்றி அலைக்கழித்துள்ளது.
சென்னையிலும் பயணிகளை வேறு வேறு ஹோட்டல்களில் தங்க வைத்து ஒப்பேற்றியது.
துபயிலும் அன்று பயணிகளை அழைத்துச்செல்ல வந்திருந்தவர்களுக்கு முறையான தகவல் தராமல் வெறுப்பேற்றியுள்ளது.
விமானம் குறித்த நேரத்தல் வந்த பயணிகள் வெளியேறிவிட்டணர் என்று சொல்லியும் சில அழைக்க வந்தவர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
பின்னர் ஒரு வழியாக, அன்று மாலை, பயணிகள் வேறு விமானத்தில்தான் ஏறவோம் என்று உறுதியாகக் கூறியதால், வேறு விமானத்தில், அதுவும், திருச்சி-சென்னை-கோலாலம்பூர் விமானத்தை, சென்னை-கோலாலம்பூர் சேவையை நிறுத்திவிட்டு (அற்புதமான சேவை) சென்னையிலிருந்து துபய்க்கு அனுப்பி பிரச்சனையை சமாளித்தது.
ஆனால் இதன் விளைவுகள்,
சேவை பாதிப்புகள்,
1. திருச்சி – துபய்
2. துபய் – திருச்சி
3. திருச்சி – கோலாலம்பூர்
4. சென்னை – கோலாலம்பூர்
5. கோலாலம்பூர் – சென்னை
6. கோலாலம்பூர் – திருச்சி
7. சென்னை – திருச்சி
8. சென்னை – சிங்கப்பூர்
9. திருச்சி – சிங்கப்பூர்
10. சிங்கப்பூர் – திருச்சி
11. சிங்கப்பூர் – சென்னை
12. திருச்சி – சென்னை
(தலை சுற்றுகிறதா)
நிதர்சனமான உண்மை.
இது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் திட்டமிட்ட திருச்சியை மட்டுமே குறி வைத்த சேவைக்குறைபாடு, நேர விரயம், பொருளாதார இழப்பு மற்றும் திருச்சி விமான நிலையத்தின் நற்பெயரைக் கெடுக்கும் திட்டமிட்ட சதி.
தொடர்ந்து திட்டமிட்டே திருச்சியில் மட்டுமே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் சதி வேலைகளுக்கும், துரோகங்களுக்கும் (துரோகங்கள் இதேபோல் தனி பட்டடியல் பின்னர் வெளியிடப்படும்)
CAG மற்றும் CBI விசாரணை தேவை என்பதே, திருச்சி விமான நிலையத்தை சார்ந்துள்ள 4 கோடி மக்களின் உணர்வுப்பூர்வ கோரிக்கையாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக