Breaking News
recent

இந்துக் கடவுள் உருவம் பொறித்த புதிய நாணயம்: இந்திய அரசே இதுதான் மதச்சார்பின்மையா?


இந்திய ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ள புதிய 5 மற்றும் 10 ரூபாய் நாணயங்களில் வைஷ்ணவி தேவி உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இதுதான் இதுதான் இந்திய அரசு கடைபிடிக்கும் மதச் சார்பின்மையா என்று கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது.
மாதா வைஷ்ணவ தேவி கோவில் வாரியத்தின் வெள்ளி விழாவைக் குறிக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ள புதிய 5 மற்றும் 10 ரூபாய் நாணயங்களில் வைஷ்ணவி தேவி உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இது தங்களது மத உணர்வை புண்படுத்துவதாகவும், மதச்சார்பின்மைக்கு இது எதிராக இருப்பதாகவும் முஸ்லிம் மத குருமார்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்திய நாணயத்தில் ஒரு இந்துமதக் கடவுளின் உருவம் வரும்போது தங்களின் பிறைச்சந்திரனும் நாணயங்களில் கொண்டுவரப்படலாம் என்று இவர்கள் கூறுகின்றனர்.
நேற்று பழைய டில்லியில் உள்ள முஸ்லிம் வர்த்தகப் பகுதியில் உள்ள ஒரு கடைக்காரரான முகமது அப்சல்கான் 500 ரூபாய்க்கு 5 ரூபாய் நாணயங்களைப் பெற்றுள்ளார். அவற்றில் கடவுளின் உருவத்தைக் கண்டதும் முதலில் இவை போலி யானவை என்று நினைத்துள்ளார். அதன்பின்னரே அவருக்கு அரசு அச்சடித்துள்ள புதிய நாணயங்கள் இவை என்று தெரியவந்துள்ளது. தான் எந்த மதத்திற்கும் ஆதரவு அளிப்பவர் அல்ல என்றபோதிலும் இவ்வாறான நாணயங்களை அரசு வெளியிடுவது வித்தியாசத்தைத் தோற்றுவிக்கும் என்று கான் குறிப்பிட்டார்.
இத்தகைய நாணயங்கள் மனதைப் புண்படுத்துவதாக உள்ளதால் அவற்றைப் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும். இத்தகைய நாணயங்கள் பிரச்சனைகளைத் தூண்டும் விதத்தில் பயன்படுத்தப்பட முடியும். தேச நலனுக்காக அரசு இவற்றைத் திரும்பப் பெறவேண்டும் என்று பதேபூர் மசூதியின் இமாமான முப்டி முகமது முகரம் அகமது கூறியுள்ளார். இதுபோன்ற நினைவு நாணயங்கள் வெளியிடப்படுவது சாதாரண நடைமுறை என்று குறிப்பிட்ட ரிசர்வ் வங்கியின் தகவல் தொடர்பாளர் அல்பனா கிள்ளவலா, மத்திய அரசின் வெளியீட்டை தாங்கள் விநியோகம் மட்டுமே செய்வதாகக் குறிப்பிட்டார்.
ஹோமிபாபா, செயின்ட் அல் போன்சோ, கதர் கிராமத் தொழில், இந்தியன் ஸ்டேட் வங்கி, ஓஎன்ஜிசி, லால்பகதூர் சாஸ்திரி, தண்டி யாத்திரை, சுவாமி விவேகானந்தா, மோதி லால் நேரு, மதன் மோகன் மாளவியா, மத்திய தலைமை கணக்கு தணிக்கை மற்றும் கு.க இயக்கம் போன்ற நினைவு நாணயங்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளன.
ஆயினும், வைஷ்ணவி தேவியின் உருவம் இந்து மதத்தை மட்டுமே குறிப்பிடுவதால் அரசு இதுபோன்ற முடிவுகளில் கவனமாக இருக்க வேண்டும் என்று வர்த்த வணிகரான கான் குறிப்பிட்டார்.
இந்திய என்பது மதச்சார்பற்ற நாடு என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்று சொல்கிறது. இந்தியாவில் வாழும் அனைத்து ஜாதி, மத, இனத்தைச் சார்ந்தவர்களுக்கும் பொதுவான இந்திய ரூபாய் நாணயத்தில் பெரும்பான்மை மதத்தைச் சார்ந்த இந்து கடவுளின் படம் பொறிப்பது சிறுபான்மையினரைத் இந்த நாட்டில் தனிமைப்படுத்துகிற செயல் ஆகும்.
மதச்சார்பின்மை என்பது அனைத்து மதங்களையும் பொதுவாகக் கருதுவது, அனைத்து மத அடையாளங்களையும் சமமாகப் பயன்படுத்துவது என்று பலர் கருதுகின்றனர். ஆனால் உண்மையான மதச்சார்பற்ற நிலை என்பது ஜாதியைப் பற்றிய எண்ணமோ, மத உணர்வோ, அதன் அடையாளங்களோ, குறியீடுகளோ, நம்பிக்கை எண்ணங்களோ அவரவர் வீடுகளுக்கும் இருந்துவிட்டுப் போகட்டும்.
பொதுவெளியில் பயன்படுத்துவதும், கடைபிடிப்பதும் தவறு. குறிப்பாக ஒரு அரசே செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. கண்டிக்கத்தக்கது!
நன்றி : வெப் துனியா
Hindu Goddess sporting a new currency the mataccarpinmaiya Indian state1
Hindu Goddess sporting a new currency the mataccarpinmaiya Indian state

VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.