Breaking News
recent

பெரம்பலூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர் மாவட் டத்தை சேர்ந்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற மே 31–ந் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
உதவித்தொகை
பெரம்பலூர் மாவட்டத்தில், எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி பெறாதவர்கள் முதல் பட்ட தாரிகள் வரை படித்து, கல்வி தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்பு இல் லாமல் காத்திருக்கும் பதிவுதாரர்களுக்கு, வேலை வாய்ப்பற்ற இளைஞர் களுக் கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படு கிறது.
கடந்த 31.03.2008 அல்லது, அதற்கு முன்னதாக கல்வி தகுதியை பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிந்தவராக இருக்க வேண்டும். மனுதாரர் தனது வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டையை தொடர்ந்து புதுப்பித்து வந்திருக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்ட, பழங் குடியின வகுப்பினர் 31.03.2013 தேதியில் 45 வயது கடந்தவராக இருக்கக்கூடாது. மற்ற வகுப் பினர், 40 வயதை கடந்தவராக இருக்கக்கூடாது. மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் கல்வி பயிலும் மாணவ, மாண விகளாக இருக்கக்கூடாது. ஆனால், தொலைதூர கல்வி பயிலுபவராக இருக்கலாம். சுயமாக தொழில் செய்பவ ராகவோ, சுயமாக சம்பாத் தியம் செய்பவராக இருக்கக் கூடாது.
தகுதியான நபர்கள் பள்ளி கல்வி சான்றிதழ்கள், கல்லூரி படிப்பு சான்றிதழ்கள், மாற்று சான்றிதழ், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகிய வற்றை காண்பித்து, விண் ணப்ப படிவங்கள் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங் கள் அலுவலக வேலை நாளில் காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்கள் மே.31–ந்தேதிவரை அளிக்க வேண்டும். மேலும் ஏற்கனவெ உதவித்தொகை பெறுபவர்கள் இந்த ஆண் டிற்குள் செலுத்த வேண்டிய சுயஉறுதிமொழி ஆவணத்தை 31.5.13–க்குள் தவறாமல் செலுத்திட வேண்டும்.
மேற்கண்ட தகவல் பெரம்ப லூர் கலெக்டர் தரேஸ் அஹ மது வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட் டுள்ளது.

நன்றி:தினத்தந்தி
VKALATHURONE

VKALATHURONE

1 கருத்து:

பல்சுவை தகவல் களஞ்சியம் சொன்னது…

தமிழகம் முழுவதும் மொத்தம் 64 கோடி வழங்கப்பட்டு உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திற்கு 54 கோடியா?

Blogger இயக்குவது.