Breaking News
recent

விசுவக்குடியில் தமுமுக நடத்திய பொதுக்கூட்டத்தின் தீர்மானங்லும் புகைப்படமும்

vkalathurone.blogspot.com
கடந்த ஞாயிறன்று (7-4-2013)சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடியில் சிறப்பாக நடந்து முடிந்தது.
பெரம்பலூரர்  இர்ஸாத்துல் உலூம் அரபிக் கல்லூரியின் முதல்வர் எ. இஹ்சானல்லா தலைமையில் நடை பெற்ற இந்த பொதுக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் K.A. மீரான் மொய்தீன், மாவட்ட செயலாளர் M. சுல்தான் மொய்தீன் முன்னிலை வகித்தனர்.  தமுமுக வின் மாணவரனி செயலாளர் A. சாதிக் பாஷா அனைவரையும்  வரவேற்றார்.
தமுமுக வின் தலைமைக் கழக பேச்சாளர் கோவை ஜாஹிர் அவர்கள் மறுமை சிந்தனை எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். இவரது சிறப்பான பேச்சு விழாவிற்கு வந்த அனைவரையும் மறுமை பற்றி சிந்திக்க வைத்தார்.  இஸ்லாம் காட்டும் சமூக நல்லிணக்கம் என்ற தலைப்பில் தமுமுக வின் மாநில செயலாளர் பேராசிரியர் முனைவர் ஹாஜா கனி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அதோடு விழா மேடையில் சிறந்த செயல்வீரர்களுக்கான விருதினை வழங்கினார். வி.களத்தூரைச்சார்ந்த ஜமீர் பாஷா, அப்துல் ரஹ்மான உட்பட 10 பேருக்கு சிறந்த செயல்வீரர்கள் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
மாவட்ட கிளை கழக தொண்டர்கள், பெண்கள் உட்பட ஆயிரத்திற்கு அதிகமானோர் கலந்துக் கொண்ட  இந்தப் பொதுக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மாணங்கள் இயற்றப்பட்டது.
1. வி.களத்தூரில் நடந்த சம்பவத்திற்காக அப்பாவி பொதுமக்களை கைது செய்த காவல் துறையை வன்மையாக கண்டிக்கிறோம்.
2. முதலமைச்சர் அவர்களின் தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தது போல் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தரவேண்டும்.
3. தமுமுக வின் நீண்ட நாள் கோரிக்கையான பெரம்பலூர் மாவட்டத்திற்கு தனியாக தலைமை ஹாஜி நியமிக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் தமுமுக போராட்டங்களை அறிவிக்கும்.
4. மின் பயணீட்டு அளவைக் குறிக்கும் போது அதற்கான தொகையும் வசூல் செய்து வீட்டிலேயே ரசீது கொடுக்கும் முறையில் தமிழக அரசு நடைமுறைப் படுத்த வேண்டும்.
ஆகிய தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது
கடைசியாக நன்றி உரையை மனித நேய மக்கள் கட்சியின் செயலாளர் A. ஜலால் தீன் கூறினார்.


vkalathurone.blogspot.com

vkalathurone.blogspot.com

vkalathurone.blogspot.com

vkalathurone.blogspot.com

vkalathurone.blogspot.com

vkalathurone.blogspot.com

vkalathurone.blogspot.com





VKALATHURONE

VKALATHURONE

1 கருத்து:

Unknown சொன்னது…

ALL PHOTOS ARE TAKEN BY ME I AM TMMK ARUMBAVUR............

Blogger இயக்குவது.