Breaking News
recent

ஆதார் மூலம் பரிவர்த்தனை மொபைல் ஆப் அறிமுகம்!


ஆதார் எண்ணை மட்டுமே கொண்டு, பணமில்லா டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்வதற்கான புதிய ‘மொபைல் ஆப்’ நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. 

நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்புக்கு பிறகு, பணமில்லா டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரிக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. கரன்சி தட்டுப்பாடு காரணமாக, டெபிட், கிரெடிட் கார்டுகள் மற்றும் இன்டர்நெட், மொபைல் பேங்கிங் மூலமாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு நகர்ப்புற மக்கள் மாறி வருகின்றனர். 

இந்நிலையில், ஆதார் எண்ணை கொண்டு டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்வதற்கான புதிய மொபைல் ஆப் நேற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆதார் பேமண்ட் ஆப்ஸ்ைச மொபைல் போனில் டவுண்லோடு செய்து கொள்ள வேண்டும். அதனுடன் பயோ மெட்ரிக் ரீடரை இணைக்க வேண்டும். 


பின்னர் வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை செலுத்த ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கை குறிப்பிட்டு பணத்தை பரிமாற்றம் செய்யலாம். ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைத்தவர்கள் மட்டுமே இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள முடியும். தற்போது 40 கோடி ஆதார் எண்கள் வங்கி கணக்கில் இணைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.