Breaking News
recent

மாதங்களிலேயே சிறந்த மாதம் ரமலான் மாதம்தான்!.!


வெறும் வயிறு மட்டும் காலியாக வைத்திருப்பதுநோன்பு பிடிப்பது அல்ல!

மாறாக ஒவ்வொரு உறுப்புகளும் அல்லாஹ்வுக்குபயந்துஅல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி
நாம் எல்லோரும் இன்ஷாஅல்லாஹ்  நோன்பு பிடிப்போம்!

மாதங்களிலேயே சிறந்த மாதம் ரமலான் மாதம்தான்!
மற்ற மாதங்களிலேயே சிலர் தொழாமல் இருப்பார்கள் .

 ரமலான் வந்துவிட்டால் பள்ளிக்கு வந்து ஜாமாத்துடன் சேர்ந்து ஐவேளை தொழுவார்கள் ! மற்ற மாதங்களிலேயே சதக்க கொடுக்கமாட்டார்கள் சிலர்.

 அந்த ரமலான் மாதத்தில் அதிக அதிகம் சதக்காச் செய்வார்கள். மற்ற மாதங்களிலேயே குர்ஆன் ஓதமாட்டார்கள் .

 அந்த மாதத்தில் அதிகமாக குரானை ஓதுவார்கள். மற்ற மாதங்களிலேயே அதிகமானவர்கள்டிவிநிகழ்ச்சிகளை பார்த்து காலத்தைக் கழித்துக் கொண்டிருப்பார்கள்.

 அந்த ரமலான் மாதம் வந்துவிட்டால் . அந்த ஒருமாதத்துக்கு மட்டும் ஓயிவு கொடுத்துவிடுவார்கள் அந்த டிவி க்கு [அந்த புனிதமான மாதத்திலும் டிவி பார்ப்பவர்களும் இருக்கிறார்கள் , நோன்பை வைத்துகொண்டு , நேரத்தை கழிக்கவேண்டும் என்பதற்காக . 

அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழியைக் காட்டவேண்டும்.] இந்த ஒரு மாதம் மற்ற 11 மாதங்களுக்கு பயிற்சிதான் இந்த ரமலான் மாதம் என்பதை எல்லோரும் புரிந்து கொண்டால் ''அல்ஹம்துலில்லாஹ்!''.]

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளான் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன; நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன; ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ரமளான் பற்றிக் கூறுகையில், "ரமளான் பிறையைக் காணாதவரை நோன்பு நோற்காதீர்கள்; (மறு) பிறையைக் காணாதவரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், அந்த மாதத்தை (முப்பது நாட்களாக)க் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.

சிலர் விளங்காமல் ஜூன் மாதத்தில் இன்ன தேதியில் ரமலான் ஆரம்பம் ஆகுது இந்த செய்தியை மற்றவர்களுக்கு தெரிவித்தால் ''உங்களுக்கு நரகம் ஹராமாகிவிடும் என்று எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் புரளியை கலப்புகிரார்கள் . 

அல்லாஹ் அவர்களுக்கு மார்க்கத்தை விளங்க கூடிய பாக்கியத்தைக் கொடுப்பானாக!



 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
""நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! 

நிச்சயமாக, நோன்பு எனக்கு(மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்!"" என்று அல்லாஹ் கூறினான்.

 நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்! எனவே, உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம்! கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்! 

யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் 'நான் நோன்பாளி!"" என்று அவர் சொல்லட்டும்!

 முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட விருப்பமானதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. 

நோன்பு துறக்கும்பொழுது அவன் மகிழ்ச்சியடைகிறான்; தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான்.""
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் மக்களை நோக்கி கூறினார்கள்..
''சஹ்ரின் [அதிகாலை உதயமாவதற்கு முன்னுள்ள நேரத்தின்] உணவை உண்ணுங்கள் ,, ஏனெனில் சஹ்ரின் உணவை உண்பதில் பரக்கத் [அருள் வளம்] உள்ளது.''

அறிவிப்பாளர்.. அனஸ் [ரலி]
நூல் புகாரி]

சில நாடுகளில் குறிப்பாக ஃ பிரான்ஸ் நாட்டில் நோன்பு திறப்பது இரவு 10 மணி ஆகும். சஹர் வைப்பது அதிகாலை 2,45 மணிக்கு வைக்கவேண்டும். 

ஆகையால சிலர்  நோன்பு திறக்கும்போதே  சஹர் சேர்த்து சாப்பிட்டு விடுவார்கள் . அப்படி செய்வதை தவிர்க்க வேண்டும்.

நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் நவின்றார்கள்.. ''நோன்பு துறப்பதில் அவசரம் காட்டும் பழக்கம் இருக்கும் வரை மக்கள் [முஸ்லிம்கள்] நல்ல நிலையில்  இருப்பார்கள்.

அறிவிப்பாளர்.. சஹ்ல் பின் ஸ அத் [ரலி]நூல் புகாரி]

இதன் கருத்து .. யூதர்களுக்கு நீங்கள் மாற்றம் செய்யுங்கள் ! அவர்கள் இருள்படர்ந்து விட்ட பின்னால் நோன்பு துறக்கிறார்கள் . 

நீங்கள் சூரியன் மறைந்த உடனே நோன்பு துறங்கள்! மேலும், யூதர்களைப் 

பின்பற்றாதிருப்பீர்கலாயின்  நீங்கள் மார்க்க ரீதியாக நல்ல நிலையில் இருக்கிறீர்கள் என்பதற்கு அதுவே ஆதாரமாகும்.

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.