Breaking News
recent

செல்லா நோட்டு.. இந்தியாவின் நடவடிக்கையும், சவூதி அரேபியாவின் நடவடிக்கையும், ஓர் ஒப்பீடு.!


கடந்த ஆண்டு வரை சவூதி அரேபியாவில் புழக்கத்தில் இருந்த 200 ரியால் மற்றும் 20 ரியால் நோட்டுக்களை சவூதி அரசு திரும்ப பெற்றது.
நம்ம மோடியை போல் திடீரென அவைகளை செல்லாது என்று அறிவித்து, மக்களை நடுத்தெருவில் நிற்பாட்டாவில்லை சவூதி அரசாங்கம்.

மாறாக, வங்கிகளுக்கு வாடிக்கையாளர்கள் கொண்டுவரும் நோட்டுக்களை தங்களிடமே வைத்துக்கொண்டு, அவைகளை மீண்டும் புழக்கத்தில் விடாமல், வாடிக்கையாளர்களுக்கு புதிய நோட்டுக்களை வழங்கி மிகவும் சாதூரியமாக செயல்பட்டது.

அதேபோல், மன்னர் ஃபஹத் இறந்த பிறகு, அவரின் உருவம் பொறித்த அனைத்து நோட்டுக்களையும் திரும்ப பெற்று, மன்னர் அப்துல்லாஹ்வின் உருவம் பொறித்த நோட்டுக்களை வெளியிட்டார்கள்.

இந்த நடவடிக்கைகள் அனைத்திலும், ஒரே நாளில் தடாலடியாக பித்துக்குளித்தனமாக செயல்படாமல் நிதானமாக செயல்பட்டது சவூதி அரசாங்கம்.

வங்கிகளில் செலுத்தப்படும் பழைய நோட்டுக்களை மீண்டும் புழக்கத்தில் விடாமல் அதற்கு பதிலாக புதிய நோட்டுக்களை வழங்கினார்கள்.

நிறைய மக்களுக்கு பழைய நோட்டுக்கு பதிலாக புதிய நோட்டு தரப்படுகிறது என்ற விசயம் கூட தெரியாது.
அந்தளவுக்கு மக்களுக்கு கடுகளவுகூட கஷ்டம் ஏற்படாமல் காதும்காதும் வைத்தார்போல் செயல்பட்டது சவூதி அரேபியா.

கெட்டாலும் மேன்மக்கள், மேன் மக்கள்தான் என்று சும்மாவா சொன்னார்கள் நம் முன்னோர்கள்.?
இத்தனைக்கும் சவூதி அரேபியாவில் மன்னராட்சி நடைபெறுகிறது.
ஆனால்.. ஜனநாயக நாடான இந்தியாவில் செல்லா நோட்டு என்ற பெயரில் மக்களை பாடாய்படுத்தி, அவர்களை சொல்லெணா துயரத்திற்கு ஆளாக்கி கொண்டிருக்கிறார் மோடி.

தகுதி இல்லாதவனிடம் ஆட்சியதிகாரம் சென்றால் எப்படியிருக்கும் என்பதை மக்கள் நன்றாகவே உணர்ந்திருப்பார்கள்.
இனிமேலாவது திருந்துகிறார்களா என்று பார்ப்போம்..!
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.