Breaking News
recent

இன்டர்நெட்டில் உங்களுடைய படங்கள் எங்கெங்கு உள்ளன என்பதை கண்டறிய!


இன்று பேஸ்புக் முதல் வாட்ஸப் வரை இணைய வெளியில் அதிகமாக படங்கள் (Photos) பகிரப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், தொடர்பில்லாதவர்களின் படங்களை கூட சிலர் இணையத்தில் ஏற்றி விடுகின்றனர்.

குறிப்பாக பெண்களின் படங்களை அப்லோட் செய்து விடுகின்றனர். ஃபேஸ்புக்கில் "இவர்களில் யார் அழகு" என்று ஒரு பெண்கள் குழு போட்டோவை அப்லோட் செய்து கேட்கும் பதிவுகள் போன்றவைகளை உதாரணமாக சொல்லலாம். இன்னும் ஒரு சிலர் ஒருபடி மேலே போய் படங்களை "கிராபிக்ஸ்" செய்து ஆபாசமாக வெளியிடுகின்றனர்.

இதனால் உரியவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இப்படி உங்களின் போட்டோக்கள் அல்லது உங்களுடைய குடும்பத்தினர்களின் நிழல் படங்கள் எங்கெங்கு இணையத்தில் உள்ளன என்பதை எளிதாக கண்டுபிடிக்கலாம்.

இதற்கு உதவுகிறது ஒரு இணையதளம். தளத்தின் பெயர்: TiNEyE. இந்த தளம் இணையத்தில் உள்ள நிழல் படங்களை தேடுவதற்கென்றே உருவாக்கப்பட்டிருக்கிறது. சர்ச் என்ஜினை விட துல்லியமாக புகைப்படங்களை தேடி காட்டுகிறது.

இது ஒளிப்படங்களை மட்டுமல்ல.. மற்ற படங்களையும் தேடி கொடுக்கிறது. எனவே "இமேஜ் சர்ச்" செய்பவர்களும், ஏற்கனவே இணையத்தில் உள்ள படங்களை தேடவும் கூட Image URL அல்லது இமேஜை அப்லோட் செய்து, இந்த தளத்தின் மூலம் கண்டறியலாம்.

இணையதளத்தின் முகவரி: http://www.tineye.com/
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.