Breaking News
recent

ATM, வங்கிகளின் வரிசையில் நிற்காமல் பணம் எடுக்க வோடபோன் சிறப்பு ஏற்பாடு!


இந்தியாவில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை நாடு முழுக்க பண தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

பெரும்பாலானோரும் தாங்கள் சம்பாதித்த பணத்தை எடுக்க வங்கி மற்றும் ஏடிஎம் மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் வோடபோன் செல்லுலார் நிறுவனம் தனது எம்-பேசா பயனர்களின் டிஜிட்டல் வேலெட்டில் இருக்கும் தொகையை, பணமாக மாற்றி அதனினை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. 

இதற்கென வோடபோன் சார்பில் கிட்டதட்ட 130,000 மையங்களை திறக்கப்பட்டிருக்கின்றன. வோடபோனின் எம்-பேசா சேவையினை நாடு முழுக்க 8.4 மில்லியன் பேர் பயன்படுத்தி வருகின்றனர். 

எம்-பேசா செயலியைக் கொண்டு உங்களது அருகாமையில் இருக்கும் எம்-பேசா மையத்தினை அறிந்து கொள்ள முடியும், அங்கு சென்று உங்களது டிஜிட்டல் வேலெட்டில் இருக்கும் தொகையை மாற்றி அதனினை பணமாக பெற்றுக் கொள்ள முடியும். 

இந்த சேவையை பயன்படுத்தி அளவு நாள் ஒன்றிற்கு 2000 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வங்கிகளிலும் இதே அளவு தொகை மட்டுமே வழங்கப்படுகின்றது. 

வோடபோன் அறிவித்திருக்கும் எம்-பேசா சேவையைானது தற்சமயம் பலருக்கும் பயன்தரும் ஒன்றாக இருக்கும். 

இன்றைய சூழலில் எங்கு பணம் கிடைக்கும் என பலரும் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில் எம்-பேசா மூலம் பணம் எடுப்பது சற்றே எளிமையானதாகவும் மாறி இருக்கிறது. 

வோடபோனின் எம்-பேசா சேவை அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்களும் மொபைல் வேலெட் சேவைகளை துவங்கியுள்ளன. 

கடந்த சில மாதங்களில் மட்டும் இந்தியாவில் மொபைல் வேலெட் சார்ந்த சேவைகளின் வரவு அதிகரித்திருக்கிறது. 

பல்வேறு ஆன்லைன் சேவை வழங்கும் நிறுவனங்களிலும் பண பரிமாற்றங்களை மேற்கொள்ள டிஜிட்டல் வேலெட்கள் பயன்படுத்தப்படுகின்றதே இதற்கு காரணம் ஆகும்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.