Breaking News
recent

துபாயில் டிரைவரில்லா அதிவேக பைக்குகள் அறிமுகம்.!


"NERVE" எனப் பெயரிடப்பட்டுள்ள, மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் உலகின் அதிவேக பைக்குகள் துபையில் முதன்முதலாக வேல்டு டிரேட் சென்டரில் நவம்பர் 13 தொடங்கி 15 வரை நடைபெறும் "Gulf Traffic Event" எனும் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த மாதம் அபுதாபியில் நடைபெற்ற "Na Trans Expo" நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.

டென்மார்க் கம்பெனி ஒன்று உருவாக்கியுள்ள இந்த மோட்டர் பைக்கை அமீரகத்திலேயே தயாரிக்கவும், சந்தைப்படுத்தவும் தகுந்த வர்த்தக கூட்டாளியை தேடி வருகிறது. இந்த பைக்குகளை இயக்க டிரைவர் தேவையில்லை, 'உணரிகள்' (Sensor) உதவியுடன் தானாகவே சாலையில் பறக்கும்.

Source: Gulf News
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.