Breaking News
recent

அயோத்தியில் பள்ளிவாசலும், கோவிலும் ஒரே இடத்தில்.!


அயோத்தியில் பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில் அயோத்தியில் முஸ்லிம்களுக்கென்று ஒரு பள்ளிவாசலும் இந்துக்களுக்கென்று ஒரு கோவிலையும் ஒரே இடத்தில் கட்டி கொடுக்க பைசலாபாத் கோட்ட ஆணையரிடம் ஒரு மனு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை உயர்நிதிமன்ற முன்னாள் நீதிபதி பலாக் பாஷு தனது தலைமையில் சுமார் 10,000 பேர்களின் கையப்பமிட்ட ஆவணத்தோடு கோட்ட ஆணையரிடம் ஒப்படைத்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட ஆணையர் “இந்த மனுவை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் இது பற்றி என்னால் தற்போது எந்த முடிவையும் எடுக்கம் முடியாது.

வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் இதற்கு கருதத் தெரிவிப்பதை தவிர்த்து கொள்கிறேன்” என்றார்.
ஏற்கனவே அயோத்தி நிலபிரச்சனைக்கு அலகாபாத் நீதிமன்றம் நிலத்தின் ஒரு பகுதியை முஸ்லிம்களுக்கும்,ஒரு பகுதி இந்துக்களுக்கும் மற்றொரு பகுதி ராம் லல்லா விற்கு கொடுக்க ஆணையிட்டது.
இந்த மனுவை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள கூடாது என்று விஸ்வ இந்து பரிஷத் கூறியுள்ளது.

இந்த வழக்கு விரைந்து முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்ச்சி செய்து வருவதாக மத்திய வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

இந்த வழக்கின் முக்கிய மனுதாரர் ஹமீது அன்சாரி சமீபத்தில் இறந்தது குறிப்பிட வேண்டிய விஷயம்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.