Breaking News
recent

பஹ்ரைனில் ஒரே நபர் பல நிறுவனங்களில் பணிபுரியும் திட்டம் அறிமுகம்.!


பஹ்ரைன் நாட்டின் ஒட்டுமொத்த ஊழியர்களில் 79 சதவிகிதம் பேர் வெளிநாட்டினர், ஆண்டொன்றுக்கு இவர்களின் வளர்ச்சி 7.8 சதவிதிதமாக உயர்ந்து வரும் நிலையில் பஹ்ரைன் நாட்டு மக்களின் வேலைவாய்ப்போ ஆண்டொன்றுக்கு 0.8 சதவிகித மந்தநிலை வளர்ச்சியாகவே உள்ளது.

இந்நிலையில், 2017 ஆம் ஆண்டு பிற்பகுதியில் செயல்படுத்தும் நோக்கில் ஒரு புதிய வகை Flexible Work Permit திட்டத்தை பஹ்ரைன் அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. இதன்படி தகுதிவாய்ந்த ஊழியர் ஒருவர் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களில் பகுதிநேர ஊழியராக பணியாற்ற முடியும் ஆனால் இத்தகைய சிறப்பு விசா அனுமதியை பெற சிறப்புக் கட்டணங்களை அரசுக்கு செலுத்த வேண்டியிருக்கும்.

மேற்படி வகை இரண்டு வருட விசா வேலை வழங்கல் அனுமதி (Work Issuance Fee) கட்டணமாக 529 டாலரும் (அதற்கு ஈடான பஹ்ரைன் தினார்), 380 டாலர் சுகாதார கட்டணம் (Health Care Fee) மற்றும் மாதந்தோறும் சமூக இன்ஷூரன்ஸ் (Monthly Social Insurance Fee) கட்டணமாக 79 டாலரும் செலுத்துவதுடன் தாய்நாட்டிற்கு திரும்புவதற்கான விமான கட்டணத்தையும் வைப்புத்தொகையாக (airfare deposit) முன்கூட்டியே செலுத்த வேண்டும். இதற்கு பதிலாக நமக்கு பகுதிநேர வேலை வழங்கும் நிறுவனங்கள் மாதாந்திர சம்பளம் மட்டுமே தரும். இந்தத் திட்டத்தின் கீழ் மருத்துவ துறையினர் வேலை பார்க்க அனுமதியில்லை.

பஹ்ரைனில் வேலை பார்க்கும் தகுதிவாய்ந்த ஊழியர்கள் யாரும் தங்களுடைய 2 வருட பணி ஒப்பந்த காலம் முடிந்த பிறகு இப்புதிய திட்டத்திற்கு விரும்பினால் மாறிக்கொள்ளலாம். மேலும் சட்டவிரோதமாக வேலைசெய்வோரும் 2017 செப்டம்பர் 20க்குள் இச்சலுகையை பயன்படுத்தி மாறிக்கொள்ளலாம். இந்தத் திட்டம் ஒரு சிறப்பு அனுமதியே அன்றி கட்டாயமில்லை. பழைய முறைப்படி ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து பணிபுரிய எந்தத் தடையுமில்லை.

இது ஒரு சலுகை மட்டுமே, புதிய முறைக்கு மாற விரும்புபவர்கள் LMRA என்கிற Labor Market Regulatory Authorityயிடம் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் போது விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்தை வர்த்தக நிறுவனங்களும் ஊழியர்களும் எவ்வாறு விரும்பி வரவேற்பர் எனத் தெரியவில்லை.

Source: Gulf News
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.