Breaking News
recent

அஜ்மானில் இலவச மருத்துவ பரிசோதனை.!


அஜ்மானில் டியர் ஹெல்த் செண்டர் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா, மகப்பேறு மருத்துவ துறை தொடக்க விழா மற்றும் இலவச மருத்துவ பரிசோதனை நிகழ்ச்சி ஆகியவை வெள்ளிக்கிழமை 11.11.2016 அன்று நடைபெற இருக்கிறது.

அஜ்மானில் தமிழகத்தைச் சேர்ந்த முகம்மது அ

லி என்பவரால் கடந்த ஆண்டு டியர் ஹெல்த் செண்டர் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த மருத்துவ நிலையம் அஜ்மான் ரமதா ஓட்டல் பிளாக் ஸ்கொயர் பின்புறம் அமைந்துள்ளது.

இந்த மருத்துவ நிலையத்தில் பொது மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட துறைகள் இருக்கின்றன. தமிழகத்தைச் சேர்ந்த மகப்பேறு டாக்டர் மீனாட்சி கதிர்வேல் அவர்களை தலைமையாகக் கொண்டு மக்கப்பேறு மருத்துவ துறை தொடங்கப்பட இருக்கிறது. மேலும் இரண்டாம் ஆண்டையொட்டி நடைபெறும் சிறப்பு விழாவில் ஷேக் அப்துல் முனேம் பின் நாசர் அல் நுயைமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார். மேலும் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர்.

காலை 9 மணி முதல் இலவச மருத்துவ பரிசோதனை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மருத்துவ நிலைய மேலாளர் தமீமுல் அன்சாரி உள்ளிட்ட குழுவினர் சிறப்புடன் செய்து வருகின்றனர்.



மேலதிக விபரங்களுக்கு தொடர்பு எண்
06 7471 335 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.