Breaking News
recent

வீடியோ காலிங்கில் ’ஸ்டேடஸ்’ அப்டேட்டை இணைக்கும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்.!


வீடியோ காலிங்கில் ’ஸ்டேடஸ்’ அப்டேட்டை இணைக்கும் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் சோதனை முறையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமாக வாட்ஸ் அப் திகழ்கிறது. புது புது அப்டேட்களை வாட்ஸ் அப்பில் இந்த நிறுவனம் அடிக்கடி செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் தற்போது நமது புகைப்படத்தையோ அல்லது வீடியோவையோ நமது தொடர்புகளில் உள்ள எண்களுக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு ’ஸ்டேடஸ்’ டேப் வசதியுடன் சேர்ந்து ஷேர் செய்ய முடியும்.

அதாவது இந்த புது சீரமைக்கப்பட்ட ஸ்டேடஸ் டேப் வசதி மூலம் நமது நண்பர்களின் தற்போதைய நிகழ்வுகளை பற்றி வீடியோ மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த புதிய வசதியானது ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் இயங்கும் பீட்டா வசதி கொண்ட கைபேசிகளில் மட்டுமே செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.