Breaking News
recent

பர்தா உடையிலும், ஃபேஷன் நிருபித்திருக்கிறார் சம்மர் அல் பார்சா.!


பர்தா உடையிலும், ஃபேஷன் டிரெண்ட் செய்ய முடியும் என நிருபித்திருக்கிறார் சம்மர் அல் பார்சா (Summer Al Barcha).

சிரியா நகரில் பிறந்து, அமெரிக்காவில் வளர்ந்தவர். எனவே இரு நாட்டும் கலாச்சாரத்திலும்,உடையிலும் இவருக்கு நல்ல புரிதல் உண்டு. சிறுவயதிலேயே அவர் வைத்திருந்த பார்பி பொம்மைகளுக்கான உடைகளை அவரே பலவிதமாக டிசைன் செய்து அசத்துவார். 

சின்ன வயதில் எற்பட்ட இந்த ஆர்வம்தான் இவரை பேஷன் துறைக்கு இழுத்து வந்திருக்கிறது. பிஸினஸ் மேனேஜ்மென்ட் படித்துள்ளவர் என்பதால், மார்க்கெட்டை வசப்படுத்தும் யுக்தியையும் தெரிந்து வைத்து இருக்கிறார். இவர் வளர்ந்ததும், ஹிஜாப் உடுத்தவேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஆனால், அவருக்கு பழைய ஸ்டைலில் பர்தா அணிய இஷ்டமில்லை. 

ஆனால், இறைவன் மீதான பக்தி அவரை அணிய தூண்டியது. அதற்கான தீர்வுதான் இந்த புதிய பர்தா ஸ்டேடென்ட். 'இன்றைய ஃபேஷனுடன் சேர்த்து, ஹிஜாப்பைக் கட்டாயம் பின்பற்ற முடியும் என்பதை உறுதியாக நம்பியதன் வெளிப்பாடே நான் உடுத்தும் எளிமையான உடைகள்' என சொல்கிறார். 

இவரின் இந்த பர்தா ஃபேஷன் இஸ்லாமிய வரம்புக்குள் உட்பட்டதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.



VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.