Breaking News
recent

துபாயில் போக்குவரத்து அபராதங்களை தவணை முறையில் செலுத்தும் வசதி.!


துபாயில் வாகன ஒட்டுனர் சந்திக்கும் தலையாய பிரச்சனை போக்குவரத்து தொடர்பான அபராதங்களே, அதிலும் சமீபத்தில் திருத்தம் செய்யப்பட்ட சட்டப்படி போக்குவரத்து அபராதம் நிலுவை உள்ள நிலையில் அமீரகத்தை விட்டு வெளியேற முடியாது.

இந்நிலையில், 5000 திர்ஹம் அபராதங்கள் நிலுவையில் உள்ள ஒட்டுனர்களுக்கு உதவும் வகையில் துபை காவல்துறையும் அபுதாபி கமர்ஷியல் பேங்க்கும் (ADCB) ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளன. 

இந்த ஒப்பந்தப்படி, மாதம் 500 திர்ஹம் என ஒரு வருடத்திற்குள் 5000 திர்ஹத்திற்கு மேல் அபராதம் நிலுவையிலுள்ளவர்கள் தவணைமுறையில் அபுதாபி கமர்ஷியல் பேங்க் கிரடிட் கார்டுகள் மூலம் செலுத்தலாம்.

அதேபோல் 20,000 திர்ஹத்திற்கு மேல் போக்குவரத்து நிலுவை அபராதம் செலுத்த வேண்டிய நிறுவனங்களும் இந்தத் தவணைமுறையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

கடந்த 2014 ஆம் ஆண்டு சுமார் 2.9 மில்லியன் திர்ஹம் அபராதங்கள் விதிக்கப்பட்டது 2015 ஆம் ஆண்டு 3.9 மில்லியன் திர்ஹங்களாக அதிகரித்துள்ளன என்றாலும் 2016 ஆம் ஆண்டு முதல் 90 நாட்களில் மட்டும் 1.2 மில்லியன் அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளது, ஒட்டுனர்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.

நமது அறிவுரை: 
கொஞ்சம் முன்னபின்னே ஆனாலும் தயவு செய்து நேரடியாகவே அபராதங்களை செலுத்தி விடுங்கள், கிரடிட் கார்டுகள் மூலம் செலுத்துவதால் வட்டியில் மாட்டி நீங்கள் மீள இயலாத நிலையை உருவாக்கிவிடும். 

இப்படி ஒரு தகவல் உண்டு என்ற செய்தியை தருவது மட்டுமே நமது நோக்கம் மாறாக வட்டியை ஊக்கப்படுத்துவதல்ல.

Source: 7 Days / msn
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.