Breaking News
recent

பொறுப்பற்ற பெற்றோர்களால் காரில் தனித்துவிடப்படும் குழந்தைகள்.!


துபாயில் நடப்பு 2016 ஆம் வருடத்தில் மட்டும் மறதியாகவும், வேண்டுமென்றும் பெற்றோர்களால் காரினுள் குழந்தைகளை வைத்து பூட்டிச் செல்லப்பட்டு பின்பு போலீஸாரால் மீட்கப்பட்ட 91 சம்பவங்கள் இதுவரை நடந்தேறியுள்ளன. அதிலும் கடந்த வாரத்தில் மட்டும் 7 குழந்தைகள் போலீஸாரால் மீட்கப்பட்டுள்ளனர். இப்படி தனித்து விடப்படும் குழந்தைகள் முச்சுத்திணறலால் பாதிக்கப்படுவதுடன் இறக்கவும் செய்கின்றனர்.

பெரும்பாலும் இத்தகைய சம்பவங்கள், பெற்றோர்கள் ஷாப்பிங் செல்லும் போது நிகழ்ந்தாலும் மேலதிகமாக மொபைல் போனில் பேசிக் கொண்டோ அல்லது சாட்டிங் செய்வதாலோ கவனம் திசைதிருப்பப்பட்டு நிகழும் பெற்றோரின் பொறுப்பற்றத்தனங்கள் அதிகரித்துள்ளன என்ற அதிர்ச்சி தகவலும் கிடைக்கின்றன.

கடந்த வாரம் மொபைல் போனில் நண்பருடன் அரட்டையடித்துக் கொண்டு குழந்தையை காரினுள் மறந்து விட்டு சென்ற ஒரு பெண்மணி, போலீஸ் அழைத்தபின்பே அலறியடித்துக் கொண்டு ஒடிவந்தது மட்டுமல்லாமல் தன் குழந்தை தன்னுடன் காரில் பயணித்ததையே சுத்தமாக மறந்து போய்விட்டேன் எனக்கூறி போலீஸாரை அதிர வைத்துள்ளார்.

இன்னொரு பெண் குழந்தையுடன் காரின் சாவியை பொறுப்புடன் உள்ளே வைத்து பூட்டிவிட்டுச் சென்றுள்ளார், கண்ணாடியை உடைத்து குழந்தை காப்பற்றப்பட்டது தனிக்கதை. இதுபோல் சாவியை மறக்கும் சம்பவங்களும் ஏராளம்.

தகவலுக்காக... கடந்த மாதம் சவுதியில் நடந்த திருமணம் ஒன்று அன்றே முடிவுக்கு வந்தது. காரணம் புதுப்பெண் புருஷனை விட்டுவிட்டு தனது நண்பர்களுடன் மொபைலில் பிஸியாக சாட்டிங்கில் ஈடுபட்டது தான்.

மேலும், நேற்றிரவு சுமார் 7.30 மணியளவில் ராஸ் அல் கைமாவில் அல்ரம்ஸ் கடற்கரை அருகே பெற்றோர்களுடன் பயணித்த ஆண் குழந்தை ஒன்று ஓடும் காரிலிருந்து தவறி விழுந்து இறந்துள்ளது.

பெற்றொர்களே! உங்கள் பிள்ளை செல்வங்கள் மீது அதிக கவனம் செலுத்துங்கள் என போலீஸார் வலியுறுத்துவதையே நாமும் வழிமொழிகிறோம்.

Source: Gulf News & 7 Days
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.