Breaking News
recent

ஒலிபெருக்கி மூலமான ‘அதானை’ நிறுத்த முயற்சிக்கும் இஸ்ரேல்.!


ஜெரூசலத்தில் ஒலி மூலமாக சூழல் மாசடைவதைத் தவிர்க்க பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி மூலமான அதான் அழைப்பை நிறுத்துவதற்கு இஸ்ரேல் அரசு எடுத்த முயற்சி இன்று தற்காலிகத் தடையை சந்தித்துள்ளது.

‘முஅத்தின்’ பிரேரணை என பெயரிடப்பட்டுள்ள குறித்த பிரேரணை மூலம் பள்ளிவாசல்களில் அதான் ஒலிபரப்பாவதைத் தடுப்பதே இஸ்ரேலின் முயற்சியாக இருக்கின்ற போதிலும் குறித்த பிரேரணையில் சமய வழிபாட்டுத் தளங்கள் எனும் சொற்பிரயோகம் இருப்பதால் அது எதிர்காலத்தில் யூத வழிபாட்டுத் தளங்களுக்கும் கட்டுப்பாட்டை உருவாக்கும் என யூத அமைப்புகள் சுட்டிக்காட்டியதன் மூலம் குறித்த பிரேரணை நிறைவேற்றப்படுவதற்கு தடை ஏற்பட்டுள்ளது.

எனினும், விரைவில் இதற்கான மாற்றீட்டுடன் இப்பிரேரணை முன்வைக்கப்படும் என பலஸ்தீன அரசியல் பிரமுகர்கள் சுட்டிக்காட்டியுள்ள அதேவேளை கடந்த ஞாயிறு அமைச்சரவை மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட போதிலும் இன்றைய தினம் அதற்கெதிராக இஸ்ரேலிய பிரதமர் நெட்டன்யாஹுவும் வாக்களித்துள்ளமையும் இதற்கான முயற்சிகள் மாற்று வடிவில் உருவாகும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.