Breaking News
recent

ரூ.500,1000 செல்லாது என அறிவித்ததால் சிகிச்சை அளிக்க மறுத்த டாக்டரால் பச்சிளம் குழந்தை பலி.!


ரூ.500, 1000 ரூபாய் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததால் செல்லுபடியாகும் பணம் கொடுத்தால் தான் சிகிச்சை அளிப்பேன் என்று கூறிய பெண் டாக்டரால் பிறந்த பச்சிளம் குழந்தை பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மராட்டிய மாநிலம் மும்பை  கோவண்டி பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ் சர்மா, தச்சு தொழிலாளி. இவரது மனைவி பெயர் கிரண். இவர் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். தனது மனைவியை  சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். 

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்  கிரணுக்கு டிசம்பர் 7-ம் தேதி தான் குழந்தை பிறக்கும் நீங்கள் வீட்டிற்கு அழைத்து செல்லாம் என்று கூறியுள்ளார்.

 டாக்டர் கூறியதை தொடர்ந்து கிரணை வீட்டிற்கு அழைத்து சென்றார் சர்மா, இந்நிலையில்  மறுநாளே கிரணைக்கு திடீரென பிரசவலி ஏற்பட்டது. ஆஸ்பத்திரிக்கு செல்வதற்கு முன்பே  வீட்டிலேயே ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இது குறை பிரசவத்தில் பிறந்தது.

செய்வது அறியாமல் திகைத்த சர்மா மனைவியையும் குழந்தையும் ஆஸ்பத்திருக்கு அழைத்து சென்றார். அந்த பெண் டாக்டர் முதல் கட்ட சிகிச்சையை அளித்து விட்டு ரூ. 6000 கட்ட வேண்டும் என்று கூறினார். 

ஜெகதீஷ் சர்மா தான் வைத்து இருந்த ரூ500 பழைய நோட்டுகளை ஆஸ்பத்திரிக்கு கட்டினார். அதனை வாங்க மறுத்த பெண் டாக்டர் செல்லுபடியாகும் பணத்தை கட்டும் படி சர்மாவிடம் கூறியுள்ளார். 

மேலும் செல்லுபடியாகும் பணத்திற்கு கால அவகாசம் கொடுக்கும்படி அந்த பெண் டாக்டரிடம் சர்மா கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண் டாக்டர் செல்லுபடியாகும் பணத்தை கட்டினால் தான் உன் மனைவிக்கு சிகிச்சை அளிப்பேன் என்று கூறி கறாராக இருந்து விட்டார். 

இதனால் மன வேதனை அடந்த சர்மா அருகில் இருக்கும் வேறு ஒரு மருத்துவமனைக்கு குழந்தையையும் மனைவியும் அழைத்த் சென்றார் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக கூறினார். இதனால் மனமுடைந்த சர்மா பெண் டாக்டர் மீது சிவாஜி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். 

மத்திய அரசு மருத்துவமனைகளில் பழைய நோட்டுகளை வாங்க வேண்டும் என்று கூறியிருந்தும் இதனை வாங்க மறுத்த பெண் டாக்டர் மீது அஜாக்கிரதையாக செயல்பட்டதால் இறப்பு, அரசு உத்தரவை செயல்படுத்த தவறுதல், ஒழுங்கீனம் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

இது தொடர்பாக அந்த மருத்துவமனைக்கு எதிராக  வழக்கு பதிவு செய்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.