Breaking News
recent

வங்கிகளில் பழைய 500, 1000 நோட்டுக்களை மாற்றப் போறீங்களா?... இந்த அடையாள அட்டைகள் அவசியம்.!


பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற வங்கிகளுக்குச் செல்வோர் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், உள்ளிட்ட அடையாள அட்டைகளில் ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது


வங்கிகளில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான பணிகள் வங்கிகளில் தொடங்கியுள்ளன. வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அடையாள அட்டையுடன் விண்ணப்பம் ஒன்றையும், வாடிக்கையாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது அறிவிப்பை அடுத்து பொதுமக்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க உதவி மையம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது மத்திய ரிசர்வ் வங்கி. சென்னை அலுவகலத்தில் ஒரு உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக பொது மக்கள் பின்வரும் தொடர்பு எண்களை அணுகலாம்: 044 25381390/ 25381392 என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பழைய நோட்டுக்களை எப்படி மாற்றுவது?
நாடு முழுவதும் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களிடமுள்ள பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை நவம்பர் 10 முதல் டிசம்பர் 30 வரை மாற்றிக் கொள்ளலாம் என்று என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
இதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, உரிய அடையாள அட்டையுடன், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விண்ணப்பத்தையும் பணத்தினை மாற்ற நினைப்பவர்கள் வங்கிகளில் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விகள்:
•வங்கியின் பெயர் மற்றும் கிளை
• விண்ணப்பதாரரின் பெயர்
• சமர்ப்பிக்கப்படும் அடையாள அட்டையின் பதிவெண்
• சமர்ப்பிக்கப்படும் ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை போன்ற தகவல்களைப் பூர்த்தி செய்து கையெழுத்து மற்றும் நாள், இடம் ஆகியவற்றை நிரப்ப வேண்டும்.
எந்தெந்த அடையாள அட்டைகளைப் பயன்படுத்தலாம்:
• ஆதார் அட்டை
• ஓட்டுனர் உரிமம்
• வாக்காளர் அடையாள அட்டை
• பாஸ்போர்ட்
• நூறுநாள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை
• மத்திய, மாநில அரசுகள் வழங்கிய அடையாள அட்டைகள்
• பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கிய அட்டைகள்
•பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகள்/ தபால் அலுவலகங்கள் ஆகியவற்றில் கொடுத்து அதற்கான முழு மதிப்பிலான தொகையையும் பெறலாம்.
இப்போதைக்கு தனிநபருக்கு ரூ.4000 வரை வங்கிகளில் பழைய நோட்டுகளை கொடுத்து புதிய நோட்டுகளை பெறலாம். அதற்கு மேலான தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம்.
•ஜன் தன் கணக்கு வைத்திருப்போர் அதற்கான விதிமுறைகளுடன் பணத்தை பரிமாற்றம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
•அனைத்து வர்த்தக வங்கிகள், ஆர்ஆர்பி.க்கள், அரசு கூட்டுறவு வங்கிகள், அல்லது எந்த ஒரு தலைமை மற்றும் துணை தபால் அலுவலகங்களிலும் தொகையை பெற்றுக் கொள்ளலாம்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.