Breaking News
recent

துபாயில் வரும் நவம்பர் 25ல் அபிராமி விருதுகள் மற்றும் பிரம்மாண்ட நட்சத்திர கலைவிழா 2016.!


துபாயில் வரும் நவ 25ல்  அபிராமி மெகா மால் மற்றும் துபாய் எஸ் ஈவெண்ட்ஸ் இணைந்து நடத்தும் அபிராபி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும்  பிரம்மாண்ட நட்சத்திர கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. விழாவிற்கான‌ அறிமுகம் மற்றும் டிக்கெட் வெளியீடு நிகழ்ச்சி துபாய் லூலூ வில்லேஜ் வளாகத்தில் சமீபத்தில் நடைபெற்றது.

தொடக்க விழாவில் அபிராமி தியேட்டர்ஸ் மேனேஜிங் டைரக்டர் அபிராமி ராமநாதன் மற்றும் எக்சிகியுடிவ் டைரக்டர் திருமதி நல்லம்மை ராமநாதன்,  நடிகர் ஜீவா, இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகர் சுப்பு பஞ்சு, பிரபல பாடலாசிரியர் மதன் கார்கி மற்றும் நடிகை மாயா உள்ளிட்ட  சினிமாத்துறையை சேர்ந்த பலர் பங்கேற்றனர். 

வரும் நவம்பர் 25ல்  துபாய் டூட்டி பிரி டென்ன்னிஸ் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. எஸ் ஈவெண்ட்ஸ் வெங்கட் கூறுகையில்
கலை நிகழ்ச்சிகளுக்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

பல்வேறு முக்கிய உணவகங்களில் டிக்கெட்கள் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சிகள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.