Breaking News
recent

துபாயில் ஒரே நாளில் 10 ஆயிரம் கிலோ நன்கொடை பொருட்கள் சேகரித்து கின்னஸ் சாதனை படைத்த தமிழர்.!


போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ ஒரே நாளில் 10,975 கிலோ பொருட்களை சேகரித்து துபாய் தமிழர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

திருநெல்வேலியை சேர்ந்த வெங்கட்ராமன் கிருஷ்ணமூர்த்தி(52) கடந்த 1992-ம் ஆண்டு முதல் துபாயில் ஆடிட்டராகப் பணி புரிந்து வருகிறார். ஆடிட்டராகப் பணி புரிந்தாலும் சமூக சேவையில் கிருஷ்ணமூர்த்திக்கு அதிக அக்கறையுண்டு. இதற்காக அனைவருக்கும் கல்வி என்ற அறக்கட்டளை ஒன்றை கிருஷ்ணமூர்த்தி நடத்தி வருகிறார்.

இந்நிலையில் 10,975 கிலோ கல்வி உபகரணப் பொருட்களை ஒரே நாளில் சேகரித்துக் கொடுத்ததற்காக கிருஷ்ணமூர்த்தியின் பெயர் உலக சாதனைகளுக்கான கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

கடந்த மாதத்தில் கிருஷ்ணமூர்த்தி சிரியா, ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக ஒரே நாளில் 50,000 ஆயிரம் நோட்டுப் புத்தகங்கள், 3 லட்சம் பென்சில்கள், 2000 ஆயிரம் ஸ்கூல் பேக்குகள் உட்பட 10,975 கிலோ எடையுள்ள பொருட்களைத் திரட்டினார். இதற்காக அவரின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

கிருஷ்ணமூர்த்தி திரட்டிக் கொடுத்த பொருட்களை எமிரேட்ஸ் ரெட் கிரசன்ட் என்ற அமைப்பு பாதிக்கப்பட்ட அகதிக் குழந்தைகளுக்கு விநியோகம் செய்யவுள்ளது. இதன் மூலம் சுமார் ஒரு லட்சம் குழந்தைகள் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன் 2015-ம் ஆண்டு சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவர் 4,571 கிலோ பொருட்களை திரட்டிக் கொடுத்ததே கின்னஸ் சாதனையாக இருந்தது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.