Breaking News
recent

இறைச்சி அதிகமாக சாப்பிடும், முதல் 10 நாடுகளில் முஸ்லிம் நாடுகள் இல்லை.!


சர்வதேச அளவில் மாமிச உணவுகளை அதிகமாகவும் மிக குறைவாகவும் சாப்பிடும் குடிமக்கள் கொண்ட நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

ஐ.நா சபை அதிகாரிகள் மேற்கொண்ட’The State of Food and Agriculture’ என்ற ஆய்வின் முடிவில் மாமிச உணவுகளை அதிகளவில் எடுத்துக்கொள்ளும் நாடுகளில் பட்டியலில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லக்ஸம்போர்க் முதல் இடம் பிடித்துள்ளது.

சராசரியாக தனிநபர் ஒருவர் ஆண்டுக்கு எத்தனை கிலோ கிராம் மாமிசம் சாப்பிடுகிறார் என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில் லக்ஸம்போர்க் நாட்டை சேர்ந்த ஒரு குடிமகன் சராசரியாக ஒரு ஆண்டிற்கு 142.5 கிலோ மாமிசம் சாப்பிடுவது தெரியவந்துள்ளது.

இதே பட்டியலில் வெளியான முதல் 10 நாடுகளை பார்ப்போம்!

லக்ஸம்போர்க் - 142.5
ஹோங்கோங் - 134.2
அமெரிக்கா - 126.6
அவுஸ்ரேலியா - 117.6
ஆஸ்திரியா - 109.1
ஸ்பெயின் - 107.9
சைப்ரஸ் - 104.4
நியூசிலாந்து - 104
டென்மார்க் - 100.7
ஐயர்லாந்து - 100.7

சர்வதேச அளவில் மாமிசம் குறைவாக சாப்பிடும் நாடுகளின் பட்டியலில் பங்களாதேஷ் இடம் பெற்றுள்ளது.

இப்பட்டியலில் வெளியான முதல் 10 நாடுகளை பார்ப்போம்!

பங்களாதேஷ் -3.1
புரூண்டி - 3.7
காங்கோ ஜனநாயக குடியரசு - 4.6
மாலவி - 4.6
சிரா லியோன் - 4.9
இந்தியா - 5.1
ரிவாண்டா - 5.6
மொசம்பிக் - 5.7
டோகோ - 6.5
ஈராக் - 7.1

சர்வதேச அளவில் மாமிச உணவை குறைவாக எடுத்துக்கொள்ளும் பட்டியலில் இலங்கை 11-வது இடம் பிடித்துள்ளது.

இந்நாட்டில் ஆண்டுக்கு சராசரியாக ஒரு நபர் 7.1 கிலோ மாமிசம் சாப்பிடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.