Breaking News
recent

குவைத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு Visa புதிப்பித்தல் செய்யும் போது மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.!


இதில்சமையல்காரர்கள்,வீட்டுபணிப் பெண்கள்,ஆயாமார்கள், ஓட்டுநர்கள் ஆகியவர்கள்அடங்குவர்கள்.இவர்கள் பல தரப்பட்ட மக்களுடன் மிகவும் நெருங்கி பழகும் வாய்ப்பு உள்ளவர்கள் ஆவர்கள். 

எனவே Visa புதிப்பித்தல் செய்யும் போது மருத்துவ பரிசோதனை செய்து இவர்களுக்கு குவைத் அரசு வரையறை செய்யபட்டுள்ள தடைசெய்யப்பட்ட நோய்கள் எதுவுமே இல்லை எனபது உறுதி செய்த பிறகே Visa புதிப்பித்தல் செய்யப்படும்.

இந்தியா, இலங்கை, பிலிப்பைன்ஸ் உட்பட 40 நாட்டு வெளிநாட்டு
தொழிலாளர்களுக்கு இந்த நடைமுறை பாதகமாகும். 2014 முதல் தாயகம் சென்று திரும்பி குவைத் வரும் வீடு சம்பந்தப்பட்ட வேலைகள் செய்யும் தொழிலாளர்களுக்கு இந்த நடைமுறை தற்போது வழக்கத்தில் உள்ளது.இந்த முயற்சி வெற்றிகரமாக அமைந்ததால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுபோல் Article number 17,18,22 பிரிவுகளில் குவைத் அரசு சம்பந்தப்பட்ட துறைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தனியார் கம்பெனியில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு மற்றும் குடும்ப Visa-வில் தங்கியுள்ள நபர்களுக்கு வரும் நாட்களில் இந்த நடைமுறை பாதகமாகும் என்று தெரிகிறது.

இதுபோல் தற்போது உள்ள வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு மருத்து காப்பீட்டு திட்ட பண வரம்பு 50 KD-யில் இருந்து 130 KD ஆக உயர்த்த உள்ளதாகவும் தெரிகிறது.

 இதை தவிர வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு என குவைத்தின் மூன்று முக்கிய இடங்களில் மருத்துவமனை மற்றும் தனி HELPLINE மையம் அமைகவுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.