Breaking News
recent

குவைத்தில் வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் (Sponsor)அரபிகளிடம் வெளியேறினால் கடும்சட்டநடவடிக்கைகளை சந்திக்கநேரிடும் என்று அரசு வெளியிட்டுள்ளது.!


குவைத்தில் (Sponsor) அரபிகளிடம் இருந்து தப்பித்து வெளியேறும் வீட்டு தொழிலாளர்களுக்கு அடைக்கலம் மற்றும் வேலை வழங்கும் நபர்கள் கடும் சட்ட நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என்று 
அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதன்படி இப்படி பட்ட தொழிலாளர்களுக்கு அடைக்கலம் மற்றும் வேலை வழங்கும் நபர்களிடம் இருந்தே அந்த நபரே நாடுகடந்த விமான பயணச்சீட்டு வழங்க வேண்டும் மற்றும் அடைக்கலம் மற்றும் வேலை வழங்கிய நபர் கடும் குவைத் சட்ட நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும்.

இதே போல் குவைத் வீட்டு தொழிலாளர் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. இது அடுத்த ஆண்டு 2017 முதல் நடைமுறைக்குவருகிறது.


இதன் படி தப்பி சென்ற தொழிலாளர்கள் குறித்து அதிகாரிகளிடம் எழுத்து பூர்வமாக புகார் செய்யும் (Sponsor)அரபி அந்த நபரை தாயகம் அனுப்ப விமான பயணச்சீட்டு வழங்க வேண்டியது இருக்காது.


அதுபோல கிரிமினல் வழக்குகளில் சிக்கும் நபர்களுக்கு அவருடைய (Sponsor)அரபி விமான பயணச்சீட்டு வழங்க வேண்டியது தேவை இருக்காது.


இந்த வருடம் அமலுக்கு வந்த வீட்டு தொழிலாளர் சட்டத்தில் (Sponsor)அரபிதப்பி ஓடும் தொழிலாளர்களுக்கு விமான பயணச்சீட்டு வழங்க வேண்டும் என்று திருத்தம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது
இதற்கு பல குவைத் Sponsors (அரபிகள்) கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த திருத்தம் செய்யபட்டுள்ளது.


இதை தவிர 2017-யில் நடைமுறைப்படுத்த உள்ள வீட்டு தொழிலாளர் சட்டத்தில் தொழிலாளர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக வேலை நேரத்தில்(மணிநேரம்) மாற்றம் மற்றும் வருடத்துக்கு விடுமுறைக்கு உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களுடன் நடைமுறைக்கு வருகிறது என்பது கூடுதல் தகவல்.


News Source(thanks):Asianet news

VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.