Breaking News
recent

அமீரகத்தில் கையினால் எழுதிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் புதிய வடிவிலான பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தல்.!


அமீரகத்தில் கையினால் எழுதிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் புதிய வடிவிலான பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்திய அரசு கையினால் எழுதிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களை புதிய வடிவிலான பாஸ்போர்ட்டை பெற்றுக் கொள்ளுமாறு ஏற்கனவே அறிவிக்கை வெளியிட்டிருந்தது.

 எனினும் இது குறித்த தகவல் தெரியாமல் அமீரகத்தில் வேலை செய்து வரும் சிலர் கையினால் எழுதிய பழைய பாஸ்போர்ட்களையே பயன்படுத்தி வருகின்றனர். 

எனவே இது போன்ற பழைய பாஸ்போர்ட்களை வைத்திருப்பவர்கள் உடனடியாக புதிய வடிவிலான மெஷின் மூலம் பாஸ்போர்ட்டின் தகவல்களை அறியக்கூடிய பாஸ்போர்ட்களை பெற்றுக் கொள்ள கேட்டுக் கொண்டுள்ளது.

ஏற்கனவே சர்வதேச விமான போக்குவரத்து நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளபடி நவம்பர் 25, 2015-க்குள் இந்த பாஸ்போர்ட்டை பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

எனினும் உலக அளவில் இன்னும் இரண்டும் இலட்சம் இந்திய பாஸ்போர்ட்கள் இன்னும் கையினால் எழுதப்பட்டவையாக இருந்து வருகின்றது. 

இதனை மாற்றிக் கொள்ள பலமுறை கேட்டுக் கொண்டும் அதனை வைத்திருப்பவர்கள் எதைப் பற்றியும் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர்.

அமீரகத்தில் இருந்து இந்திய மக்கள் இது குறித்து தெரிந்து கொண்டு அருகில் உள்ள பாஸ்போர்ட் புதுப்பிக்கும் மையத்தில் பழைய கையினால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டை கொடுத்து புதிய பாஸ்போர்ட்டை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 

கடந்த 1990-ஆம் ஆண்டுகளில் கையினால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்கள் 20 வருடம் செல்லுபடியாகக்கூடிய வகையில் வழங்கப்பட்டது. இதனை பலர் பெற்றுள்ளனர். அரசின் தகவல் படி அதனை பெரும்பாலோர் மாற்றி விட்டனர்.

இந்திய அரசு கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் மெஷின் மூலம் தகவல்களை சரிபார்க்க கூடிய பாஸ்போர்ட்களை வழங்கி வருகிறது. 

அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம் இத்தகைய வசதியுடைய பாஸ்போர்ட்களை கடந்த மார்ச் 2006 முதல் வழங்கி வருகிறது.

எனினும் அமீரகத்தில் இன்னும் எத்தனை பேர் புதிய பாஸ்போர்ட்களை பெற வேண்டியுள்ளது என்பது குறித்த தகவல் முழுமையாக தெரியவில்லை.

ஆனால் பழைய பாஸ்போர்ட்களை வைத்திருப்பவர்கள் அதனை மாற்றிக் கொள்வதன் மூலம் பல்வேறு நாடுகளுக்கும் எவ்வித சிரமுமின்றி தங்களது பயணத்தை அமைத்துக் கொள்ளலாம். 

இல்லையென்றால் தேவையற்ற இடையூறுகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

புதிய பாஸ்போர்ட்கள் பெற விரும்புவோர் அது குறித்த விபரங்களை பெற அருகில் உள்ள பாஸ்போர்ட் புதுப்பிக்கும் மையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.