Breaking News
recent

துபாயில் வருகிறது தோட்டங்கள் சூழ்ந்த சிட்டிலேண்ட் மால்.!(photos)


துபாயில் செயல்படும் 'துபை மிராக்கிள் கார்டன்' மற்றும் 'துபை பட்டர்பிளை கார்டன்' ஆகியவற்றை வெற்றிகரமாக நிர்மாணித்த சிட்டிலேண்ட் குழுமம் தற்போது உலகின் முதல் தோட்டங்களால் சூழப்பட்ட பசுமை மால் ஒன்றை நிறுவ உத்தேசித்துள்ளனர்.

சுமார் 1.1 மில்லியன் திர்ஹம் செலவில் கட்டப்படவுள்ள இந்த சிட்டிலேண்ட் மால் 2018 ஆம் ஆண்டு பிற்பகுதியில் திறக்கப்படும் போது ஆண்டொன்றுக்கு சுமார் 12 மில்லியன் வாடிக்கையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இது துபை குளோபல் வில்லேஜ் அருகே தாவரவியல் அதிசயங்கள் நிறைந்த மாலாக அமையவுள்ளது.

மால் நடுவே பிரம்மாண்ட திறந்தவெளி தோட்டமும், மினி மிரக்கிள் கார்டன், மினி வாட்டர் பார்க், 300 ஆண்டுகளுக்கு முந்தைய மரங்களின் தோட்டம், ஜப்பானிய தோட்டம், 360 டிகிரியில் மால் கூறையின் மீது அமையவுள்ள தோட்டம், மத்திய தோட்டத்தை சுற்றி நடைபயிற்சிப் பாதை, உணவகங்கள், 350 வணிக மையங்கள், 6000 வாகன நிறுத்தங்கள் என பல்வேறு புதிய புதிய தொழிற்நுட்ப அம்சங்களுடன் எங்கெங்கும் இயற்கை மரம், செடி, கொடிகளால் அலங்கரிக்கப்படுவதுடன் மால் நடுவில் அமையவுள்ள தோட்டத்தை வாடிக்கையாளர்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.








Source: Gulf News / Emirates 247
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.