Breaking News
recent

குவைத் விசிட் விசா பெற சம்பள வரையறை உயர்வு.!


கடந்த வாரம் தான் குவைத்தில் குடும்ப விசா பெறுவதற்கான சம்பள வரையறையை 250 தினாரிலிருந்து 450 தினாராக உயர்த்திய நிலையில் தற்போது மனைவி, குழந்தைகளை அழைத்து வருவதற்கு விசிட் விசாவுக்கான சம்பள வரையறையை 150 தினாரிலிருந்து 200 தினாராக உயர்த்தியுள்ளது.

மேலும், உடன்பிறந்தவர்கள் போன்ற ரத்த உறவுகளுக்கான விசிட் விசா பெற குறைந்தபட்சம் 300 தினார் சம்பளம் பெற வேண்டும். மேலும், 50 வயதுக்கு மேற்பட்ட பெற்றோர்களை விசிட் விசாவில் அழைத்து வர அனுமதியில்லை என்றாலும் விதிவிலக்காக தவிர்க்க இயலாத சூழ்நிலைகளில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விசிட் விசாவுக்கு விண்ணப்பிக்கும் (As Sponsor) கணவரின் சம்பளம் மட்டுமே கணக்கிடப்படும் மனைவி, குழந்தைகளுடைய சம்பளம் சேர்த்து கணக்கிடப்படாது என்றும், மனைவியின் (Wife As Sponsor) சம்பளத்தை குறிப்பிட்டு விண்ணப்பிக்கும் போது கணவருடைய சம்பளம் சேர்த்து கணக்கிடப்படாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

தற்போது 2,670,000 வெளிநாட்டினர் குவைத்தில் வாழ்கின்றனர்.

Source: Gulf News
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.