Breaking News
recent

அபுதாபியில் தொழிலாளர்களுக்கு மோசமான வசிப்பிடங்கள் வழங்கிய நிறுவனங்களுக்கு சிக்கல்.!


அபுதாபியின் ஷஹாமா (Shahama) பிரதேசத்தில் செயல்பட்டு வரும் 8 கட்டுமான கம்பெனிகளின் தொழிலாளர் வசிப்பிடங்கள் (Labour Camps) மோசமான நிலையில் பராமரிக்கப்பட்டு வந்ததை தொடர்ந்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அபுதாபி மாநகராட்சி அதிகாரிகளின் அதிரடி சோதனையின் போது சில நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு 3 அடுக்கு படுக்கைகளை வழங்கியுள்ளதுடன் பலரை தரையிலும் படுக்க வைத்திருந்தனர். 

மேலும் அவர்களுக்கு வழங்கப்பட்ட சமயலறையும் மிக மோசமான நிலையில் பராமரிப்பின்றி இருந்துள்ளதை தொடர்ந்தே இந்த அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.

தொழிலாளர்களுக்கு சுத்தமான, சுகாதாரமான, பாதுகாப்பான, கண்ணியமான வசிப்பிடங்களை வழங்குவதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அபுதாபி மாநகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Source: 7 Days
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.