Breaking News
recent

துபாய் தொழில்நுட்ப ஜீடெக்ஸ் கண்காட்சியில் புதிய ரேடார் காமிரா அறிமுகம்.!


துபையில் ஒவ்வொரு வருடமும் ஜீடெக்ஸ் ஷாப்பர்ஸ் (Gitex Shoppers) எனும் சில்லறை விற்பனைக்கான புதிய மின்னனு பொருட்களின் கண்காட்சி நடைபெற்று முடிந்தவுடன் புதிய நவீன கண்டுபிடிப்பு கருவிகளை காட்சிப்படுத்தி விளக்கும் கண்காட்சி 'ஜீடெக்ஸ் டெக்னாலஜி வீக்' (Gitex Technology Week) எனும் பெயரில் நடைபெறும். 

அதன்படி கடந்த அக்டோபர் 1 முதல் 8 வரை நடைபெற்ற ஜீடெக்ஸ் ஷாப்பர்ஸை தொடர்ந்து அக்டோபர் 16 முதல் 20 வரை ஜீடெக்ஸ் டெக்னாலஜி வீக் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த டெக்னாலஜி வீக் கண்காட்சியில், துபையில் தயாரிக்கப்பட்ட அதிநவீன போக்குவரத்து ரேடார் கேமிரா ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 இந்த எடை குறைவான, அகச்சிவப்பு ஒளிக்கதிர் (Infrared Technology) தொழிற்நுட்பத்தில் செயல்படும் ரேடார் காமிரா 50 மீட்டர் தூரம் வரை அதிவேகத்தில் செல்லும் வாகனங்களையும், மஞ்சள் கோட்டில் எல்லை மீறும் வாகனங்களை படம்பிடிப்பதுடன் 10 நொடிகள் வீடியோ பதிவு செய்யும் தன்மையுடையது. ஃபிளாஸ் (Flash) தேவையில்லாதது.

எல்லை மீறிய வேகத்தில் முரட்டுத்தனமான வாகன ஒட்டிகளை (Hard Shoulder Drivers) உயர் தொழிற்நுட்பத்தில் படமெடுக்கும் இக்கேமரா (High Resolution Photos) 3ஜி இணைப்பு வழியாக அல்லது பென்டிரைவ் பதிவு மூலம் தகவல்களை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பும் மேலும் இதை தற்காலிகமாக சாலை மறைவுகளிலும், நிரந்தரமாக சாலை நடுவிலும் பொருத்தலாம். 

பேட்டரியிலும், நேரடி மின்சாரத்திலும், சோலார் மின்சாரத்திலும் இயங்கக்கூடியது. மேலும் ரிமோட் மூலமும் கட்டுப்படுத்த முடியும்.

இதனால் சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால்,  இந்த காசு புடுங்குற ஐட்டத்தை சீக்கிரம் துபை ரோட்டுல பாக்கலாம்!

Source: Gulf News
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.