Breaking News
recent

துபாயில் 25 கிலோ தங்கத்தை நேர்மையாக திருப்பி கொடுத்த டேக்ஸி டிரைவர்.!


துபாய் சாலை மற்றும் போக்குவரத்து துறையின் (RTA) கீழ் செயல்படும் துபை டேக்ஸி கார்ப்பரேசனில் (DTC) டேக்ஸி டிரைவராக பணியாற்றும் 31 வயது பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த 'லிட்டன் சந்திரநாத் பால்' தன்னுடைய டேக்ஸியில் பயணிகள் தவறவிட்ட ஏறக்குறைய 3.5 மில்லியன் திர்ஹம் மதிப்புடைய 25 கிலோ தங்க பாளங்களை நேர்மையாக திருப்பியளித்தார்.

துபை விமான நிலையம் டெர்மினல் 1ல் இருந்து பயணித்த நான்கு பயணிகள் அதிகாலை 2.45 மணியளவில் முரக்கபாத் ஏரியாவில் இறக்கிவிடப்பட்டனர், அப்போது அவர்களின் உடமைகளை இறக்க உதவி செய்ய முயன்றபோது அவர்கள் டிரைவரின் உதவியை மறுத்துவிட்டனர்.

வாடகையை பெற்றுக்கொண்டு பின்புறம் எதையும் கவனிக்காமல் சென்ற டிரைவர் லிட்டனை சுமார் 1.40 மணிநேரம் கழித்து துபை போக்குவரத்து துறையின் வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து மொபைலில் அழைத்து பயணிகள் எதையாவது அவரது டேக்ஸியில் தவறவிட்டு சென்றார்களா என விசாரித்ததை தொடர்ந்து பின்பக்கம் தேடிப்பார்த்தால் 'லேப்டாப் பேக்' உள்ளே சுமார் 25 கிலோ தங்கம், உடனே ஓடோடி சென்று காவல்துறை வசம் ஒப்படைத்தார். தங்கத்தை பெற்றுக் கொண்ட அந்த லிபிய நாட்டு பயணி அந்த டேக்ஸி டிரைவருக்கு 'நன்றி மட்டும்' தெரிவித்தார்.

துபை போக்குவரத்து துறை சிஇஓ யூசுப் அல் அலி அவர்கள் சார்பாக சார்பாக டேக்ஸி டிரைவர் லிட்டனுக்கு 1000 திர்ஹம் மற்றும் 1 வருடத்திற்கு இலவச தங்குமிட வசதியும் மேலும், ரெயில் சிஇஓ அப்துல் மொஹ்சீன் இப்ராஹீம் அவர்கள் சார்பாக சார்பாக 5000 திர்ஹத்துடன் நற்சான்று பத்திரமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்த நன்றி, பரிசுகளுக்கு எல்லாம் மேல் தன்னுடைய தாயும் உடன் பிறந்த 3 சகோதரிகளும் வாழ்த்தியதையே மிகப்பெரும் பரிசாக நினைக்கின்றார் இன்னும் திருமணமாக லிட்டன். 

டெயில் பீஸ்:
துபை போக்குவரத்து துறையின் சிஇஓ யூசுப் அல் அலி அவர்கள் கூறுகையில், பொதுவாக பயணிகள் தங்களுடைய மொபைல் போன்கள், ஐபோன்கள், பாஸ்போர்ட்கள், துணிமணிகள் போன்ற பொருட்களையே விட்டுச் செல்வார்கள் ஆனால் ஒரு அரேபிய குடும்பம் சமீபத்தில் தங்களுடைய கைக்குழந்தையையே டேக்ஸியில் மறந்து விட்டு சென்றனர் எனக்கூறி அதிர வைத்தார். 

Source: Gulf News 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.