Breaking News
recent

புனித ஹரம் ஷரீபில் என்றுமில்லாத பாதுகாப்புடன் நேற்றைய குத்பாவில் 1.5 மில்லியன் மக்கள் பங்கேற்பு.!


இந்த ஆண்டு உலகம் முழுவதும் இருந்து ஹஜ் பயணத்தை மேற்கொண்டுள்ள இஸ்லாமியர்களில் ஒன்றரை லட்சம் பேர் மெக்கா நகரை சென்றடைந்துள்ளனர். அடுத்த சில நாட்களில் அந்த எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும்.

இந்த ஆண்டுக்கான சவுதி அரேபியாவின் ஹஜ் புனித யாத்திரை நேற்று  வெள்ளிக்கிழமை துவங்கியுள்ளது. நேற்றைய குத்பாவில் 1.5 மில்லியன் மக்கள் கலந்து கொண்டனர்.  

இந்த வருடம் விபத்து எதுவும் நிகழாமல் இருக்கும் பொறுட்டு சவுதி அரசு பல்வேறு கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

எதிர்பாரா விளைவுகளைத் தவிர்க்கும் நோக்கில் புனிதப் பயணிகள் அனைவருக்கும் மின்னியல் கைப்பட்டை வழங்கப்பட்டுள்ளது. 

கூட்டம் அதிகமுள்ள இடங்களை அறிந்து புனிதப் பயணிகள் தங்கள் பயணத் திட்டத்தை வகுத்துக்கொள்ள அது உதவும்.

புனித மக்காவில் மட்டும் 800க்கும் அதிகமான சுற்றுப்புறக் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

புனிதப் பயணிகள் இங்கு வந்து சேர்ந்ததிலிருந்து, கடமைகளை முடித்துவிட்டுத் திரும்பும்வரை அவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் எந்தவிதச் சமரசமும் செய்யப்படமாட்டாது என்று மேஜர் ஜெனரல் முகம்மது அல் அஹ்மதி கூறினார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.