Breaking News
recent

அபுதாபியில் 1 பில்லியன் டாலர் செலவில் மெடிக்கல் சிட்டி.!


1 பில்லியன் டாலர் செலவில் தயாராகிவரும் ஷேக் ஷக்போத் மெடிக்கல் சிட்டி 2017 ஆம் ஆண்டு அபுதாபியின் சுகாதாரத்துறையான விடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

சர்வதேச தரம் மற்றும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு திட்டங்களுடன் தயாராகிவரும் இந்த மெடிக்கல் சிட்டியில்,

2 படுக்கைகள் மன்னர் குடும்பத்திற்காக (For Royals),
36 படுக்கைகள் முக்கியஸ்தர்களுக்காக (VIP Suites),
424 உள்நோயாளிகளுக்கான படுக்கைகள் (Post-operative Inpatients),
120 கர்ப்பிணி மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான படுக்கைகள் (Maternity & Infant Ward),
32 அவசர நோயாளிகளுக்கான படுக்கைகள் (ICU Beds),
30 இதய நோயாளிகளுக்கான படுக்கைகள் (Cardiac ICU Beds for Cardiovascular Dept),
24 அவசர இதய சிகிச்சைக்கான படுக்கைகள் (Cardiac ICU Beds for Surgery),
20 தீப்புண் நோயாளிகளுக்கான படுக்கைகள் (Burn Treatment),
26 பிறந்த குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைக்கான படுக்கைகள் (Neonatal ICU Beds),
18 பிரசவ அறை படுக்கைகள் (Labour & Delivery Dept)
என மொத்தம் 732 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அபுதாபியின் அல் மப்ரக் (Al Mafraq) பகுதியில் சுமார் 3 லட்சம் சதுர மீட்டர் அளவில் 4 மாடி டவர் பில்டிங்காக கட்டப்பட்டுவரும் இந்த அல் ஷக்போத் மெடிக்கல் சிட்டி பார்க்கிங் வளாகத்தில் ஒரே நேரத்தில் 1660 வாகனங்களை நிறுத்த முடியும். மேலும் பல்வேறு புறநோயாளிகளுக்கான வசதியுடன் 2 ஹெலிபேடுகளும் தயாராகி வருகின்றன.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.