Breaking News
recent

துபாயில்இந்திய சுதந்திர தினத்தையோட்டி மாணவ குழந்தைகள் பங்கேற்ற மாறுவேட போட்டி.!


துபாயில் ரேஹா இசை மற்றும் நடனப்பள்ளி  சார்பாக இந்திய சுதந்திர‌ தினத்தைக் கொண்டாடும் விதமாக  சின்னஞ்சிறிய மாணவ, மாணவியருக்கு  மாறுவேடப் போட்டி நடை பெற்றது. 

தேசத்தலைவர்கள் , மற்றும் இந்தியாவின் பெருமையை உலகுக்குக் கொண்டு சென்ற விளையாட்டு வீரர்கள், இசைக்கலைஞர்கள போன்று பல்வேறு  ஆடை அணிகலன்கள் அணிந்து வந்ததோடு அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் குறித்து உரைய் ஆற்றினார்கள். 

இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக ரேஹா இசை மற்றும் நடனப்பள்ளி கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது

கோடை கால விடுமுறையைக் களிக்க தாய் நாடு செல்லாத சிறுவர்களும்,சிறுமிகளும், மிகவும் ஆர்வத்துடன் இங்கு பயின்றார்கள் கோடை கால விடுமுறை மிகவும் பயனுள்ளதாகவும்,பல விதமான கலைகளை கற்றுக்கொள்ளும் ஒரு இடமாகவும் ரேஹா (ReHa) அமைந்துள்ளது. 

இங்கு பயிலும் மாணவர்கள் இசை,நடனம்,ஓவியம் மற்றுமல்லாது வேறு பல புதியவற்றையும் பயில்கின்றார்கள். ஓவ்வொரு வியாழக்கிழமையும் “ஃபன் டே” (Fun Day) என்று கொண்டாடப் படுகின்றது.

 அதில் அவர்கள் நீச்சல் பயில ஒரு வாரம் நீச்சல் குளத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். (Swimming)ஒரு வாரம் அரேபியன் செண்டரில் “ஐஸ் ஸ்கேட்டிங்” (Ice Skat-ing) அழைத்து செல்லப்பட்டனர். 

மேலும் “யங் செஃப்” -சிறிய சமையலாளர்.(Young Chef) ஹென்னா இடுவதற்குப் பயிற்சி(Henna Designing),ஃபேஸ் பெயிண்டிங் (Face Painting), மற்றும் வித்தியாசமான உடைகளை அணிந்து ஃபேஷன் பரேடு (Fashion Parade), ஜுவல்லரி மேக்கிங், (Jewellery making) வீணாகிப் போகும் பொருட்களில் இருந்து கைவினைப் பொருட்கள் (Best out of Waste-Upcycling) போன்றவைகளும் இங்கு பயிற்றுவிக்கப்படுகின்றது.

மேலும் நடனப்பயிற்சிகள்(Freestyle Dance),கரோக்கியுடன் பாடல்களைப் பாடும் விதம்(karaoke Singing),சிறுவர்களுக்கான் உடற்பயிற்சிகள்(Kids Zumba),கைவினைப்பொருட்கள் (Art and Crafts)ஆகியவற்றைப் பயில்விக்க அதற்கெனப் பயிற்றுவிக்கப் பட்ட  ஆசிரியர் குழுவும் (Special Team) உண்டு. இங்கு பயிலும் மாணவர்கள் ,பெற்றோர் வரும் வரையில் காத்திருக்கும் நேரத்தில் புத்தகம் படிப்பதை ஊக்குவிக்கும் விதமாக ஒரு சிறிய நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது.(Library)

சென்ற மாதம் மறைந்த இந்தியத்தலைவர்,விஞ்ஞானி  'Dr.A.P.J அப்துல் கலாம் “ அவர்களுக்கு ஒரு அஞ்சலி செலுத்தும் விதமாக மாணவர்களிடம் எனது  கனவு  எனது இலட்சியம் எனது பார்வையில் கலாம் ஆகிய தலைப்புகளில் பேச்சுப்போட்டியும் நடைபெற்றது.

மேலும் சிறு குழந்தைகளுக்கு அவரை பற்றிய  ஒரு சிறிய PowerPoint விளக்கக்காட்சி ஒளிபரப்பப் பட்டது.

 மேலும் மறு நாள்,அனைத்து மாணவர்களையும் ஷார்ஜாவில் உள்ள அறிவியல் காட்சியகத்திற்கு அழைத்துச் சென்றனர். (Trip to Science Museum)

மேலும் வீணாகிப் போகும் பிளாஸ்டிக் மற்றும் காகிதங்களில் இருந்து கைவினைப் பொருட்கள் செய்யவும் இங்கு பயிற்றுவிக்கப்படுகிறது. 

ரேஹா இசை மற்றும் நடனப்பள்ளி,தற்பொழுது அமிரகத்தில் வளர்ந்து வரும் ஒரு புதிய ஸ்தாபனமாகும். 

இந்த வருடம் பிப்ரவரியில் தொடங்கிய இந்த இசை மற்றும் நடனப்பள்ளியின் “சம்மர் கேம்ப்” (Summer Camp)மிகவும் சிறப்பாகவும் ,வித்தியாசமான முறைகளிலும் நடை பெற்றது.

கோடை கால  விடுமுறையைக் களிக்க தாய் நாடு செல்லாத சிறுவர்களும்,சிறுமிகளும், மிகவும் ஆர்வத்துடன் இங்கு பயில வருகின்றார்கள்.

அவர்களது கோடை கால விடுமுறை மிகவும் பயனுள்ளதாகவும்,பல விதமான கலைகளை கற்றுக்கொள்ளும் ஒரு இடமாகவும் ரேஹா (ReHa) அமைந்துள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.