Breaking News
recent

ஒலிம்பிக்: 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் சவுதி பெண்.!


2012ம் ஆண்டு ஒலிம்பிக்கின் போது சவுதி பெண்ணொருவர் 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டதையடுத்து இம்முறை ரியோ ஒலிம்பிக், பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் மேலும் ஒரு சவுதி பெண்ணான, 22 வயது அபுல்ஜதாயெல் பங்கேற்று தெரிவுச் சுற்றில் ஏழாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

100 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற முதலாவது சவுதி பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்க அதேவேளை பஹரைன் உட்பட பல மத்திய கிழக்கு நாடுகள் சார்பில் பெண்கள் பங்களிப்பு அதிகரித்து வருகின்றமையும் இம்முறை சவுதி, மற்றும் ஆப்கனிஸ்தானிலிருந்தும் பெண் போட்டியாளர்கள் ஓட்டப் போட்டிகளில் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.