Breaking News
recent

ஊருக்குள்ளே ஒரு வன உயிரின பூங்கா ! இது துபாயின் பாலைவன புரட்சி.!(photos)


மண்மேடுகள் வான்முட்டும் கோபுரங்களாக எழுந்தன, சர்வதேச வியாபார சந்தையாய் செழித்தது, பெட்ரோல் இன்றியே செல்வம் பெருக்கெடுத்தது, 

ஒட்டகங்கள் காட்சிப் பொருளாக மாற வாகனங்கள் சாலைகளில் பறந்தன, காய்ந்த ரொட்டிகளும் பேரீத்தம் பழங்களும் வரலாறாகி போக அனைத்துலக உணவு வகைகளும் மிக எளிதாய் சாலை ஒரம் கிடைத்தது, துபையின் செல்வத்தால் பன்னாட்டு அந்நிய செலாவணிகளும் உயர்ந்தன!

சுமார் 60 வருடங்களுக்கு முன் மனிதர்களே வாழ யோசித்த மண் இந்த துபை ஆனால் இன்று உலகெங்கிலுமிருந்து மக்கள் வந்து வாழ்ந்து சுவாசிக்கும் மண்ணாக மாறியது விந்தையே! இந்த பாலைவனத்தில் ஓர் நவீன சோலைவனத்தை காட்டு மிருகங்களுக்கும் உருவாக்கி இன்னும் வளர்வோம் என்ன பந்தயம் என கட்டி நிற்கிறது!

ஆம், வரும் அக்டோபர் மாதம் 2016 முதல் துபாய் அல் வர்கா பகுதியில், சுமார் 1 பில்லியன் திர்ஹம் செலவில், 119 ஹெக்டேர் பரப்பளவில், புதிய தொழிற்நுட்பத்தில் மிருகங்களுக்கான 5 நட்சத்திர வன உயிரியல் பூங்கா 'துபாய் சஃபாரி' எனும் பெயரில் செயல்படவுள்ளது.

10,500 மிருகங்களை பாராமரிக்கும் வசதியுள்ள இதில் ஆரம்பமாக உலகெங்கிங்கிலுமிருந்தும் கொண்டு வரப்படும் சுமார் 5000 மிருகங்கள், பறவையினங்களுடன் துவங்கவுள்ள இந்தப் பூங்காவில் குளிரூட்டப்பட்ட செயற்கை நகரும் பாறைகள் சிங்கம் புலிகளுக்காக, செயற்கை மூடுபனியை உருவாக்கும் பாறைகள் சிறுத்தைகள் கழுதை புலிகளுக்காக, குளிர்நீர் குளங்கள் நீர்யானை, காட்டெருமை, மான் இனங்களுக்காக, சாரல் நீர் வழியும் மிருகங்களின் தங்குமிடங்கள் என பார்த்துப் பார்த்து உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் பூங்காவை சுற்றிப்பார்க்க சுமார் 8 மணிநேரமாகும் என்பதால் இங்கேயே மிருகங்களின் நடமாட்டங்களை நேரில் ரசித்தவாறு சாப்பிட 4 உணவகங்கள், குறைந்தது 2 நாட்களாவது பூங்காவினுள்ளேயே தங்கி இளைப்பாறி செல்ல ஏதுவாய் நட்சத்திர ஹோட்டல்கள், பூங்காவிற்கு தேவையான ஒரு பகுதி மின்சாரத்தை தயாரித்துக் கொள்ள சோலார் பேனல்கள் அதன் கீழேயே கார் பார்க்கிங் வசதிகள், 1000 சீட் வசதியுள்ள தியேட்டரில் மிருகங்களை பற்றியும் 300 சீட் வசதியுள்ள இன்னொரு தியேட்டரில் பறவைகள் குறித்தும் கல்விசார் படங்கள் காணும் வசதி, தண்ணீரில் வாழும் மிருகங்களை தண்ணீருக்குள்ளேயே சென்று காணும் வசதி, துபாயின் தட்பவெப்ப சூழ்நிலைக்கேற்ப மாற்றப்படும் பூங்காவின் வேலைநெரங்கள், பல்வேறு மிருகங்களையும் நடந்தே இயற்கையாய் காணும் வசதி என அனைத்து மிருகங்களும் அதனதன் இயற்கை சூழலை உணரும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.

துபாய் சஃபாரி இன்னுமோர் மணிமகுடம்.






Source: 7 days
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.