Breaking News
recent

துபாயில் இனி DEWA சேவைகளைப் பெற வீட்டு வாடகை ஒப்பந்த சான்றிதழ் அவசியம்.!


அமீரகத்தில் வாழும் 80 சதவிகிதத்தினர் சம்பாத்தியம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டுள்ள வெளிநாட்டினரே. இவர்களில் குறைந்த ஊதியத் தொழிலாளர்கள் நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் உறைவிடங்களில் வாழ்கின்றனர். 

இன்னும் பலருக்கு குடும்பத்துடன் வாழ்வதற்கான வசதிகளை நிறுவனங்களே செய்து தரும். இன்னும் பலர் நிறுவனங்கள் தரும் வீட்டு வாடகையை பணமாக பெற்றுக் கொண்டு தங்களின் வசதிகளுக்கேற்ப பழைய / புதிய வில்லாக்களிலும், அடுக்குமாடி குடியிருப்புகளிலும் வாழ்வர். இன்னும் பலர் ஒரே பிளாட்டை பகிர்ந்து கொண்டும் சமாளித்து வருகின்றனர்.

பெருவாரியான தனிக்கட்டை ஊழியர்கள் சிரமத்தை தினமும் சகித்துக் கொள்ளும் பலர் வாழும் அடுக்குக்கட்டில் அறை வாழ்க்கைக்கும் இன்னும் சிலர் எக்ஸிகியூட்டிவ் அறை வாழ்க்கை என தங்களுக்குத் தாங்களே மனதை தேற்றிக் கொள்ளக்கூடியவர்கள்.

சுயதொழில் நிறுவனங்களை நடத்தும் சிறு, குறு, பெரு தொழிலதிபர்களும் அவரவர் வசதிக்கேற்ப வாழ்விடங்களை தேர்வு செய்து கொள்வர்.

மேற்சுட்டியபடி வாழ்வோர்கள் DEWA நிறுவனத்திடமிருந்து மின்சாரம், தண்ணீர் போன்ற இணைப்புக்களை பெற துபாய் நிலத்துறையிடம் (Dubai Land Department - DLD) நமது வீட்டு வாடகை ஒப்பந்தத்தை சமர்ப்பித்து, சான்றிதழ் வாங்கினால் மட்டுமே இனி DEWA இணைப்புக்களை பெற முடியும்.

இதன் தொடர்பில், கடந்த 2015 நவம்பர் மாதம் முதல் DEWA இணைப்புகளையும், வீட்டு வாடகை ஒப்பந்த சான்றிதழ்களையும் ஒரே இடத்தில் வழங்கும் பூர்வாங்க, சோதனை அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் "மனைகள் ஒழுங்குமுறை அலுவலகங்களில்" (Real Estate Regulatory Agency - RERA) செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அனைத்து அரசு அலுவல்களையும் ஒன்றிணைக்கும் "ஸ்மார்ட் துபாய் 2021" (Vision Smart Dubai 2021) எனும் தூர நோக்கத் திட்டத்தின் ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Gulf News
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.