Breaking News
recent

வெளிநாடுகளில் வேலைக்கு செல்ல பயிற்சி; மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் புதிய ஏற்பாடு.!


வெளிநாடுகளில் வேலை செய்ய விரும்பும் இந்தியர்களுக்கு சர்வதேச தரத்தில் பல பயிற்சிகளை வழங்கி அதற்கு சான்றிதழ்களையும் வழங்க மத்திய வெளியுறவுத்துறை முடிவு செய்துள்ளது. 

இதற்காக, தொழில்முனைவு மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது. 

பிரவாசி கவுசல் விகாஸ் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் இந்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து 7-8 லட்சம் பேர் வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்கின்றனர்.

 பெரும்பாலும், வளைகுடா நாடுகளுக்கு செல்வது அதிகமாக உள்ளது. ஆனாலும், அங்குள்ள சட்டவிதிமுறைகள், மொழி, கலாச்சாரம், நிபந்தனைகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ளாமல் செல்வதால் பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. 

இதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், இங்கிருந்து வேலைக்காக செல்பவர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெறுவதற்கான தகவல் உதவிகள், திறமைகளை பெருக்கி கொள்வதற்கான பயிற்சிகளை சில குறிப்பிட்ட துறைகளில் வழங்கப்படுகிறது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.