Breaking News
recent

மகனால் கைவிடப்பட்ட இந்து முதியவருக்கு இறுதிச் சடங்கு செய்த முஸ்லிம் பெண்.!


தெலுங்கானாவில் மகனால் கைவிடப்பட்ட இந்து முதியவருக்கு முஸ்லிம் பெண் ஒருவர் இறுதிச் சடங்கு செய்துள்ளார். இது அப்பகுதியில் உள்ள அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டம், ஹன்ம கொண்டா பகுதியில் ஆதரவற்றோர்களுக்கான முதியோர் இல்லத்தை யாகூப் பீ எனும் முஸ்லிம் பெண் நடத்தி வருகிறார். இங்கு வசித்து வந்த இந்து மதத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

முதியவரின் இறுதிச் சடங்கை செய்வதற்காக அவரது மகனை அணுகியுள்ளார் யாகூப் பீ. ஆனால் அவர் கிறித்துவ மதத்திற்கு மாறிவிட்டதால் தந்தையின் ஆசையை நிறைவேற்ற முடியாது என கூறி மறுத்துவிட்டார்.

யாகூப் பீயின் கணவரும் வெளியூர் சென்றுவிட்டதால், தானே இறுதிச் சடங்கை நிறைவேற்ற முடிவு செய்தார். இந்து சம்பிரதாயப்படி இறுதிச் சடங்கு நடத்த முடிவெடுத்து முதியோர் இல்லத்தில் இருந்து ஹன்ம கொண்டா இடுகாடு வரை முதியவரின் சடலத்துடன் முன்னால் தீச்சட்டி ஏந்தி நடந்து சென்றார். பின்னர் இடுகாட்டில் இந்து முறைப்படி அனைத்து சடங்குகளையும் செய்து சிதைக்கு தீமூட்டினார்.


இது குறித்து யாகூப் பீ கூறுகையில் “முதியவர் கடந்த 2 ஆண்டுகளாக என்னுடைய பராமரிப்பில் இருந்து வந்தார். எனது தந்தையாகவே அவரை பாவித்தேன். எனவே, அவரது மகளாக இந்து முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்தேன்” என்று தெரிவித்தார்.





VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.