Breaking News
recent

வளைகுடாவில் வசிக்கும் அனைவருக்கும் வி.களத்தூர்ஒன்.காம் சார்பாக ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்.!


உலகெங்கும் பெருநாள்களும்,திருநாள்களும் ஏதாவது ஒரு நாளில் எங்கேயாவது கொண்டாடப்பட்டு வருகின்றன.இந்த விஷேச நாள்கள் யாராவது ஒருவரது பிறப்பையோ,இறப்பையோ மையமாக மட்டுமே கொண்டாடப்படுகின்றன.

இஸ்லாமிய பெருநாள்கள் இவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை.யாருடைய பிறப்பையும் இறப்பையும் கொண்டாடும் வகையில் இஸ்லாமிய பெருநாள்கள் இல்லை.உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியர்கள் தற்போது கொண்டாடும் ரமலானின் ஈகைத் திருநாள் என்பது.. தான தர்மங்களையும்,மனிதநேயத்தையும் போற்றுவதாக மட்டுமே அமைந்திருக்கின்றன.

ரமலான் மாதம் முழுதும் பசித்திருந்து தனித்திருந்து விழித்திருந்து இறையோனை வணங்கிய அடியார்கள் அந்த வணக்கங்களில் ஏற்படும் சிறு தவறுகளை நிவர்த்தி செய்வதற்களாக நபிகளார் கற்றுத் தந்த வழிமுறையை பின்பற்றி ஏழை மக்களுக்கு ஃபித்ரா எனும் தர்மத்தை வழங்கி அவர்களையும் அந்த நாளில் மகிழ்ச்சியாக பெருநாளை கொண்டாட செய்து இந்த பெருநாளை முஸ்லிம்கள் கொண்டாட தொடங்குகின்றனர்.

சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் வாணவேடிக்கைகளோ,பட்டாசுகளோ இந்த பண்டிகையில் இடம்பெறுவது கிடையாது.

பெருநாள் திடலில் சங்கமிக்கும் அணைவரும் தொழுகை முடிந்த பின்னர் ஒருவரையொருவர் ஆரத்தழுவி ஆலிங்கனம் செய்து வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வர்.இந்த ஒவ்வெருவரும் தமது உறவினர்களை சந்திப்பது உள்ளிட்ட பல்வேறு மனிதாபிமான காரியங்களும் ஈடுபடுவர்.

இத்தகைய ஈகை உள்ளத்தையும் இரக்க சிந்தனையையும் மனித சமூகத்தில் நிரந்தரமாக உருவாக்கிடவே ரமலானும் ஈகைப் பெருநாளும் கொண்டாடப் படுகின்றன.இந்த மனித நேய உணர்வுகள் வெறுமனே ஒரு நாளில் மட்டும் முடிந்து விடக் கூடியதாக இருப்பதை நம்மால் காண முடிகிறது.

பெருநாள் தினத்தில் மாத்திரம் ஃபித்ராவை விநியோகித்து ஏழைகளையும் அந்த நாளில் புத்தாடை அணியச் செய்தும்,நல்ல உணவுகளை உண்ணச் செய்யவும் முடியுமெனில்.. அந்த ஏழைகள் என்றென்றும் நிரந்தரமாக சந்தோஷமாக இருக்க வழிவகை செய்ய ஜகாத் எனும் அழகிய பொருளாதார தர்ம திட்டத்தை ஏன் இன்னும் இந்த சமுதாயம் முறையாக செயல்படுத்தவில்லை..?

ஃபித்ராவை கூட்டாக வசூலித்து அதனை முறையாக செய்யும் ஜமாத்களும் அமைப்புக்களும் வருங்காலங்களில் ஜகாத்தையும் கூட்டு முறையில் வசூலித்து அதை தேவையானவர்களுக்கு முறைப்படி வழங்க ஆவண செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.ஏனெனில் மிகப் பெரிய பணக்காரர்களும் பரம ஏழைகளும் நமது சமுதாயத்தில் சம அளவில் நிறைந்து காணப்படுகின்றனர் என்பதை நாம் இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.

வறுமையை ஒழிப்போம் என்று சபதமேற்பது தான் இந்த ஈகைத்திருநாளின் முக்கிய அம்சமாக இருக்க வேண்டும்.

உலகெங்கிலும் வாழும் இஸ்லாமிய சொந்தங்களுக்கும் வி.களத்தூர் உறவுகளுக்கும் எமது வி.களத்தூர்ஒன் இணையதளத்தின் சார்பில் இனிய ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் 

ஈத் முபாரக்… இன்று போல் என்றும் இன்புற்று வாழ்க…!

இப்படிக்கு 
உ.முஹம்மத் இக்பால் 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.