Breaking News
recent

கத்தார் விமான நிலையம் ஜனநெரிசலால் ஸ்தம்பிதம்; வழியனுப்ப செல்பவர்களை அடித்து துரத்தும் போலீஸ்.!


நோன்புப் பெருநாள் மற்றும் பள்ளிகள்  விடுமுறை தினம் அறிவிக்கப்பட்டதை அடுத்து வெளிநாடுகளிலிருந்து தொழிலுக்காக  கத்தாரில் வசிக்கும் வேலையாட்கள் தத்தமது நாடுகளுக்கு அதிகமதிகம் திரும்புகின்றனர்.

இதனால் கத்தார் விமானநிலையம் மக்கள் வெள்ளத்தால் மிதக்கிறது.
இது மாத்திரமின்றி விமான நிலையத்தைச் சூழ போலீஸ் பாதுகாப்பு

பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் வழியனுப்ப வரும் ஏனையோருக்கும் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டு துரத்தப்படுவதாகவும் தெரிவித்தார். 

தயவு செய்து வழியனுப்ப செல்பவர்கள் கத்தாரில் வசிக்கும் நம் நாட்டவர்கள் அங்கு வாகனத்தரிப்பிடம் மற்றும் உள்நுழைய அனுமதியிலை என்பதை கருத்திற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இந்த நிலை ஒரு சில தினங்களுக்கு நீடிக்கும்  (ஈத் பெருநாள் வரை)என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறைந்தது 3 மணி நேரத்திற்கு முன்னர் விமானநிலையம் செல்லுங்க இது உங்கள்
விமான நிலைய நடவடிக்கைள் முடிக்க எளிதாக இருக்கும்.

அண்மையில் தீவிரவாதிகளின் ஊடுருவல் கட்டாருக்குள் புனித ரமழானில் அதிகரிக்கும் என அமெரிக்கா எச்சரித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.