Breaking News
recent

அஜ்மான் மருத்துவமனைக்கு மாத்திரைகளை சேகரித்து நன்கொடையாக வழங்கும் பள்ளி மாணவர்.!


அஜ்மானில் அல் இக்சான் சேரிட்டி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை குறைந்த செலவில் வசதியற்றவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. 

இதனால் இந்த மருத்துவமனைக்கு மருத்துவ உப கரணங்கள், உபயோகித்து மீதம் உள்ள மாத்திரைகள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் நன்கொடையாக வழங்கி வருகின்றனர். இதனை இலவசமாக மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சை பெற வருபவர்களுக்கு வழங்கி வருகிறது.

துபாயில் உள்ள பள்ளியில் பயின்று வரும் மாணவர் விவேகானந்தன். அவர் ஷேர் இன் கேர் என்ற நூலகத்தை நடத்தி வருகிறார். இந்த நூலகத்தில் உறுப்பினர்களாக இருந்து வரும் நண்பர்களிடம் இந்த மருத்துவமனை குறித்து தெரிவித்தார். அந்த மருத்துவமனைக்கு நம்மால் இயன்ற வகையில் மாத்திரைகளை சேகரித்து வழங்க வேண்டும் என்றார். இதன் அடிப்பையில் சுமார் 50 கிலோ அளவுக்கு மாத்திரைகளை சேகரித்து மருத்துவமனை அதிகாரி லத்திபாவிடம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை மருத்துவர்கள், பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மருத்துவனை டாக்டர்கள் தமிழக  மாணவரின் சமுதாய சேவையினை பாராட்டினர்.

இதேபோல் அமீரகத்தில் உபயோகித்தது போக தங்களது வீட்டில் உள்ள மாத்திரைகளை நன்கொடையாக வழங்க விரும்புவோர் 050 51 96 433 எனும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கொடுக்கலாம்.


VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.