Breaking News
recent

இஸ்லாமிய மார்க்கத்தில் இறந்தவர்களை எரித்துவிடாமல், மண்ணில் புதைப்பது ஏன்..?


பதில்: 1. மனித உடலில் உள்ள ஆக்கக்கூறுகள் மண்ணிலும் இருக்கின்றது. 

மனித உடலில் காணப்படும் தனிமப் பொருட்கள் குறைந்த அளவிலோ அல்லது அதிக அளவிலோ மண்ணிலும் இருக்கின்றது.

 ஆகவே இறந்து போன உடலை மண்ணில் புதைப்பது அறிவியல் ரீதியாக மிகச் சிறந்ததாகும். 

அவ்வாறு செய்வதால் இறந்து போன உடல் மிக எளிதாக மட்கிப் போய், மண்ணோடு மண்ணாக கலந்து விடும்.  

2. சுற்றுப்புறச்சூழல் மாசுபடுத்தப் படுவதில்லை. இறந்த உடலை எரிப்பதால் காற்று மண்டலம் பாதிக்கப்படுகிறது.

 அவ்வாறு பாதிக்கப்பட்ட காற்று, உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பதுடன், சுற்றுப்புறச் சூழலிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

 எனவே இறந்து போன உடலை மண்ணில் புதைப்பதால், சுற்றுப்புறச் சூழல் மாசு படுத்தப் படுவதில்லை.

3. சுற்றியுள்ள நிலம் வளம் பெறுகிறது: இறந்து போன உடலை எரிப்பதற்கென ஏராளமான மரங்கள் வெட்டப்படுகின்றன. 

இதனால் பூமியின் பசுமைத் தன்மை குறைந்து வருகிறது. அத்துடன் மேற்படி செயல் சுற்றுப் புறச் சூழலுக்கு தீங்காக அமைவதுடன், விலங்குகள், பறவைகள் போன்றவற்றின் இயற்கைச் சூழலும் பாதிப்படைகிறது. 

ஆனால் இறந்து போன உடல் மண்ணில் புதைக்கப்படுவதால், ஏராளமான மரங்கள் வெட்டப்படுவது தவிர்க்கப்படுவதுடன், புதைக்கப்படும் இடத்தை சுற்றியுள்ள நிலமும் வளம் மிக்கதாக மாறி சுற்றுப் புறச் சூழலையும் மேம்படுத்துகிறது.

4. மிகக் சிக்கனமானது: இறந்து போன உடலை எரிப்பதற்கு, குவிண்டால் கணக்கில் விறகுகள் வீணாக்கப்படுகின்றது. 

இந்தியாவில் இறந்து போன உடலை எரிப்பதற்கு மாத்திரம் கோடிக்கணக்கான பணம் செலவு செய்யப்படுகிறது. 

ஆனால் இறந்து போன உடலை, மண்ணில் புதைக்க மிகக் குறைந்த செலவுதான் ஆகும். எனவே இறந்து போன உடலை மண்ணில் புதைப்பது, மிகச் சிக்கனமானது.

5. இறந்து போன உடல்களை புதைப்பதற்காக மீண்டும், மீண்டும் ஒரே நிலத்தை பயன்படுத்தலாம். 

இறந்து போன உடலை எரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட விறகுகளை, மீண்டும் பயன்படுத்த முடியாது. ஏனெனில் இறந்து போன உடலை எரிக்கும்போது விறகுகள் சாம்பலாகி விடும். ஆனால் இறந்து போன உடலை புதைப்பதற்காக 

பயன்படுத்தப்பட்ட நிலத்தையே – மீண்டும் சில வருடங்கள் கழித்து வேறொரு உடலை புதைக்க பயன்படுத்த முடியும். 

ஏனெனில் புதைக்கப்பட்ட மனித உடல் மக்கி, மண்ணோடு மண்ணாக கலந்து விடும்.

டாக்டர் ஜாகிர் நாயக்
(நிறுவனர், இஸ்லாமிய ஆய்வு மையம், மும்பை)

VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.