Breaking News
recent

துபாயில் பள்ளி மாணவர்கள் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி.!


துபாயில் பள்ளி மாணவர்கள் தொழிலாளர் முகாம்களில் ஏற்பாடு செய்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

துபாயைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் கிரீன் குளோப் என்ற அமைப்பினை ஏற்படுத்தி சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, போதைப் பொருளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.


இந்த அமைப்பின் சார்பில் தமிழக மாணவர் ஹுமைத் அபுபக்கர் தலைமையில் ரமலான் மாதத்தில் பல்வேறு தொழிலாளர்கள் முகாம்களில் தங்கியுள்ள ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் ஆயிரம் பேருக்கு மேல் நோன்பு திறப்பதற்கான உணவுப் பொருட்களை வழங்கினர். இதில் சமோசா, பழரசம், பிரியாணி, தண்ணீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த உணவுப் பொருட்களை வாங்குவதற்கான நிதியை பள்ளி மாணவர்கள் தங்களுக்கு பெற்றோர்கள் செலவுக்காக வழங்கும் தொகையில் இருந்து சேகரித்து இந்த உதவிகளை செய்தனர்.

மாணவர்கள் மிகவும் இளம் வயதிலேயே சமூகப் பணிகளை மேற்கொள்வதற்கு தொழிலாளர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இந்த உதவி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற திவ்யஸ்ரீ என்ற மாணவி இந்த உதவியை பெற்றுக் கொண்ட தொழிலாளர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். நம்மால் இயன்ற உதவிகளை அவர்களுக்கு செய்ய நினைத்ததையொட்டி பெருமிதம் கொள்வதாக கூறினார்.



 




VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.