Breaking News
recent

கடந்த 6 மாதங்களில் 16 ஆயிரம் ஏர் இந்தியா விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டுள்ளன- ; பாராளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்.!


மத்திய விமான போக்குவரத்து துறை இணை மந்திரி ஜெயந்த் சின்ஹா பாராளுமன்றத்தில் இன்று வெளியிட்ட தகவல் பின்வருமாறு:-

தவிர்க்க முடியாத சூழ்நிலை மற்றும் மோசமான வானிலை காரணமாக அரசு பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா தாமதமாக இயக்கிய விமானங்களின் விபரம். நடப்பு ஆண்டில் முதல் 6 மாதங்களில் 16,848 ஏர் இந்தியா விமானங்கள் 15 நிமி்டங்களுக்கும் மேலாக தாமதமாக இயக்கப்பட்டுள்ளன. 


11,267 ஏர் இந்தியா விமானங்கள் கால அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டு இயக்கப்பட்டுள்ளன. விமானங்களை நேரந்தவறாமல் இயக்க பணியாளர்களை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாமதங்களை தவிர்க்க அவ்வப்போது விமான நிலைய ஆபரேட்டர்கள் மற்றும் தரைதளத்தை கையாளுபவர்களிடம் கூட்டம் நடத்தி ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.