Breaking News
recent

அடிக்கடி SELFIE எடுப்பதால் முகத்தில் சுருக்கம், தோல் பாதிக்குமாம்.!


‘‘ஸ்மார்ட் போன்களில் அடிக்கடி செல்ஃபி எடுப்பதால் முகத்தில் சுருக்கம் ஏற்படும், தோல் பாதிக்கும்’’ என்று தோல் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஸ்மார்ட் போன்கள் வருகைக்கு பின்னர், செல்பி மோகம் அதிகரித்து விட்டது. எங்கு பார்த்தாலும் செல்பி எடுத்துக் கொள்ளும் மோகம் தலைவிரித்தாடுகிறது.

மிக அபாயமான இடங்களில் செல்பி எடுக்கும் ஆர்வமும் இளைஞர்களிடம் அதிகரித்துள்ளது. இதனால் பலர் உயிரிழந்த சம்பவமும் நடந்துள்ளது. இந்நிலையில், ஸ்மார்ட் போன்களில் செல்பி எடுப்பதால், அதிகபட்ச ஒளி மற்றும் கதிர்வீச்சால் முகத்தில் விரைவிலேயே சுருக்கம் வரும், வயதான தோற்றம் ஏற்படும், தோல் தொடர்பான நோய்கள் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

செல்பி எடுக்கும் போது, எந்த கையால் போனை பிடித்து கொண்டு படம் எடுக்கிறீர்கள் என்பதை, உங்கள் முகத்தை பார்த்தே மருத்துவர்களால் கூறமுடியும் என்கின்றனர். முகத்தில் எந்த பக்கம் அதிக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது என்பதை பார்த்து கண்டுபிடிக்க முடியும் என்கின்றனர்.

இதுகுறித்து இங்கிலாந்தின் லினியா ஸ்கின் கிளினிக் மருத்துவ இயக்குநர் சைமன் ஜோவாகி கூறும்போது, ‘‘அதிகமாக செல்வி எடுப்பவர்களும், பிளாக்கில் உள்ளவர்களும் கவலைப்பட வேண்டும். ஸ்மார்ட் போன்களில் இருந்து வரும் நீல ஒளி கூட நமது தோலை பாதிக்கும்’’ என்கிறார்.

‘‘மொபைல் போன்களில் இருந்து வெளிப்படும் மின்காந்த கதிர்வீச்சு, தோலில் உள்ள மரபணுக்களை (டிஎன்ஏ) அழித்து விடும். அதனால் தோல் விரைவில் வயதான தோற்றம் பெற்றுவிடும். சுருக்கங்கள் அதிகரித்து விடும்’’ என்று நிபுணர்கள் கூறுவதாக டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க ‘ஒபாகி ஸ்கின் ஹெல்த் இன்ஸ்டிடியூட்’ நிறுவனர் ஜியின் ஒபாகி கூறும்போது, ‘‘நிறைய செல்பி எடுப்பவர்களின் முகத் திசுக்கள் ஒரு பக்கம் மாசடைந்திருக்கும். முகத்தின் ஒரு பக்கத்தில் உங்களால் அதை பார்க்க முடியாது. இதை தடுக்க வேண்டியது அவசியம். தோலில் உள்ள தாதுக்களை காந்த அலைகள் மாற்றி விடுகின்றன. ‘சன்ஸ்கிரீன்’ போன்ற சாதனங்கள் எல்லாம் உங்களை பாதுகாக்காது’’ என்று எச்சரித்துள்ளார்.

VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.