Breaking News
recent

ஓமனில் கொள்ளை முயற்சியை தடுத்த போது கேரள ஊழியர் கடத்தி கொலை.!


ஓமன் நாட்டில் கொள்ளை முயற்சியை தடுத்தபோது கேரள ஊழியர் ஒருவர் கடத்தி படுகொலை செய்யப்பட்டார். 

அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு குடும்பத்தினரும், உறவினர்களும் கேரள அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்திய ஊழியர்கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஜான் பிலிப். இவர் அரபு நாடான ஓமனில் கடந்த 13 ஆண்டுகளாக வசித்து வந்தார்.

இவருக்கு பினு என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர்களும் ஒமனில்தான் வசித்து வருகின்றனர். மகன் 7–ம் வகுப்பும், மகள் 5–ம் வகுப்பும் படித்து வந்தனர்.

அங்கு இப்ரி நகர் அருகேயுள்ள சுனைனா என்ற இடத்தில் எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் ஜான் பிலிப் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.கடத்தி கொலை

இந்த நிலையில் ஜான் பிலிப் திடீரென கடந்த 10–ந்தேதி இரவு காணாமல் போனார். இது குறித்து அந்த எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் நிர்வாகி, போலீசில் புகார் செய்தார்.

அதைத்தொடர்ந்து அவரை போலீசார் தேடி வந்தனர்.இந்த நிலையில், ஜான் பிலிப் கடத்தி கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. 

அவரது உடல், சவுதி அரேபியாவுக்கு செல்லும் வழியில் மஸ்ரூக் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அவர் கொலை செய்யப்பட்டுள்ளதை போலீஸ் அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார்.கொள்ளை முயற்சியால் சம்பவம்

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், எரிபொருள் நிரப்பும் மையத்தில் 4 ஆயிரம் ஓ.எம்.ஆர். முதல் 5 ஆயிரம் ஓ.எம்.ஆர். 

வரை பணம் (இந்திய மதிப்புப்படி சுமார் ரூ.6½ லட்சம்) காணாமல் போய் உள்ளதும், ஜான் பிலிப் காணாமல் போனபோது, அந்த விற்பனை நிலையத்தில் இருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவும் சேதப்படுத்தப்பட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது.

எனவே கொள்ளை முயற்சியை தடுத்தபோது ஜான் பிலிப் கடத்தி கொல்லப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.உடல் கொண்டு வரப்படுமா?

இது தொடர்பான வழக்கில் அந்த நாட்டை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே ஜான் பிலிப்பின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர், உறவினர்கள் கேரள மாநில அரசை நாடி உள்ளனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.